பிக்ஸட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. பஜாஜ் பைனான்ஸில் எவ்வளவு வட்டி தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் வங்கி பிக்ஸட் டெபாசிட் என்பது வட்டி குறைவான முதலீட்டு திட்டமாக இருந்தாலும், பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

இதனாலேயே இன்றைய காலகட்டத்திலும் அதிக லாபம் இல்லாவிட்டாலும், பலரும் வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகளையே நாடுகின்றனர்.

எனினும் இன்றைய காலகட்டத்திலும் சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருகின்றன. அந்தவகையில் 7% வரை வட்டி கொடுக்கும் பஜாஜ் பைனான்ஸில் என்ன சலுகைகள்? எவ்வளவு வட்டி விகிதம் என்று தான் இன்று பார்க்க இருக்கிறோம்.

எவ்வளவு வட்டி விகிதம்?

எவ்வளவு வட்டி விகிதம்?

பஜாஜ் பைனான்ஸ் திங்கட்கிழமையன்று 36 - 60 மாதங்களுக்கான டெபாசிட்களுக்கு 40 அடிப்படை புள்ளிகள் வட்டியை கூட்டியுள்ளது. இந்த வட்டி விகிதம் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதோடு இந்த வட்டி விகிதமானது 5 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட்டுகள் அதிகரிக்கும்

டெபாசிட்டுகள் அதிகரிக்கும்

இந்த வட்டி அதிகரிப்பால் புதிய டெபாசிட் செய்யப்படும் தொகை மற்றும் பிக்ஸட் டெபாசிட் புதுபித்தலும் அதிகரிக்கும் என்றும் இந்த நிதி நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இதற்கு முன்னதாக 6.60 சதவீதம் வட்டி வீதத்தினை பெற்று வந்த வாடிக்கையாளார்கள் இனி 7 சதவீதம் வரை பெறுவர் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு என்ன சலுகை?

மூத்த குடிமக்களுக்கு என்ன சலுகை?

இந்த நிறுவனம் அதன் இணையதளம் மூலம் டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகளையும் அளித்து வருகின்றது. இதே மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.25% வட்டி அதிகமாக கிடைக்குமென்றும் அறிவித்துள்ளது. அதாவது மூத்த குடிமக்கள் 7.25% வரை வட்டியாக பெறுவர். மற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், பொதுமக்களுக்கு வழங்கும் டெபாசிட் விகிதங்களை விட, 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக வழங்குகின்றன. ஆனால் பஜாஜ் பைனான்ஸ் 25 அடிப்படை புள்ளிகள் தான் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கின்றது. எனினும் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மொத்தத்தில் வட்டி விகிதம் சற்று அதிகமே.

 குறுகிய கால டெபாசிட்களுக்கு வட்டி?

குறுகிய கால டெபாசிட்களுக்கு வட்டி?

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 12 - 23 மாதங்களுக்கான டெபாசிட்களுக்கு 5 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இதே 24 - 36 மாதங்களுக்கான டெபாசிட்களுக்கு 30 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகம். ஆக புதிய வாடிக்கையாளர்கள் 12 - 23 மாதங்களுக்கான டெபாசிட்களுக்கு 6.15% வட்டியும், இதே 24 - 35 மாதங்களுக்கு 6.60% வட்டி விகிதமும் பெறுவர். தற்போது இந்த நிறுவனத்தில் 31 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+