2022ம் ஆண்டு தொடங்கி அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வரும் ஜனவரி மாதத்தில், 16 நாட்களுக்கு விடுமுறையாக உள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி 2022ம் ஆண்டுக்கான வருடாந்திர விடுமுறை பட்டியலினை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஜனவரி மாதத்தில் புத்தாண்டு தொடங்கி பொங்கல், குடியரசு தின விழா என பல்வேறு விடுமுறை தினங்கள் உள்ளன. ஆக அதனை பற்றித் தான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.
மூன்று பிரிவுகளாக விடுமுறை
ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்கள் பொதுவாக 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று மாநில வாரியான விடுமுறை, இரண்டாவது மதம் சார்ந்த விடுமுறைகள், அடுத்தது பண்டிகை விடுமுறைகள். இதில் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற முக்கியமான பண்டிகைக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது, எனினும் மேற்கண்ட பட்டியலில் பெரும்பாலான விடுமுறைகள் மாநில வாரியான விடுமுறைகள் தான். ஆக இந்த முறையில் தமிழகத்தில் ஜனவரி 2022ல் எத்தனை நாள் விடுமுறை என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
ஜனவரியில் விடுமுறை
ஜனவரி 01, 2022 - புத்தாண்டு விடுமுறை
ஜனவரி 3, 2022 - புத்தாண்டு கொண்டாட்டம்/லோசூங்
ஜனவரி 4, 2022 - லோசூங்
ஜனவரி 11 , 2022 - மிஷனரி தினம் -
ஜனவரி 12, 2022 - சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்
ஜனவரி 14, 2022 - மகர சங்கராந்தி/பொங்கல்
ஜனவரி 15, 2022 - உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம்
ஜனவரி 18: தை பூசம்
ஜனவரி 26: குடியரசு தினம்
பல்வேறு மாநில வாரியான விடுமுறைகள் தவிர. வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 2, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 8, 2022 - இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 9, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 16, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 22, 2022 - நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 23, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 30, 2022 - ஞாயிற்றுக்கிழமை
தமிழகத்தில் எத்தனை நாள் விடுமுறை
ஜனவரி 01, 2022 - புத்தாண்டு விடுமுறை
ஜனவரி 2, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 8, 2022 - இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 9, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 15, 2022 - உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 18: தை பூசம்
ஜனவரி 22, 2022 - நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 23, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 26: குடியரசு தினம்
ஜனவரி 30, 2022 - ஞாயிற்றுக்கிழமை
வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்?
மேற்கண்ட இந்த விடுமுறை நாட்களில் விழாக்காலம் என்பதால் பணத் தேவை அதிகம் இருக்கலாம். ஆக அதற்கேற்ப முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஏனெனில் இந்த காலகட்டங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆக முன்னரே அதற்கேற்ப தயாராகிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications