எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் பயனாளர்கள் பரிவர்த்தனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பகிர்ந்துள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும், நிலையில், ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்வது என்பது மிக விருப்பமான ஒன்றாக இருந்து வருகின்றது.
எனினும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்பது எப்போதும் சரியானதாக இருக்கிறதா? என்றால் நிச்சயம் இல்லை. சில நேரங்களில் இதில் மோசடிகளும் நடக்க வாய்ப்பிருக்கிறது.
மோசடிகளில் இருந்து தப்பிக்க வழி
ஆக அத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க சில நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் உங்களது கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. ஆக இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் இவ்வங்கி சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
லாகின் பாதுகாப்பு
உங்களது இணைய பக்கத்தினை லாகின் செய்யும் பாஸ்வேர்டுகளை தனித்துவமான மற்றும் சிக்கலானதாக பயன்படுத்த வேண்டும்.
பாஸ்வேர்டுகளை அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் பயனர் ஐடி, பாஸ்வேர்டினை ஒரு போதும் சேமிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ வேண்டாம். எதிலும் எழுதி வைக்கவும் வேண்டாம்.
வங்கி ஒரு போதும் உங்கள் பயனர் ஐடி/பாஸ்வேர்டு/கார்டு எண்/ சீக்ரெட் எண்/CVV/OTP எண்ணினை கேட்காது.
இணைய பாதுகாப்பு
இணையத்தில் உங்களது வங்கி இணைய பக்கத்திற்கு செல்ல '' https" என்று ஆரம்பிக்கும் வங்கியின் இணைய பக்கத்திற்கு நேரடியாக செல்லுங்கள்.
மற்ற இடங்களில் பொதுவெளியில் உள்ள வை பை வசதியை பயன்படுத்தி, ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகள் செய்வதை தடுக்கவும்.
அதேபோல உங்களது எப்போது உங்களது பரிவர்த்தனையை முடித்தவுடன், லாக் அவுட் செய்யவும்.
யுபிஐ பாதுகாப்பு
உங்களின் யுபிஐ கணக்குகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிகளையும் எஸ்பிஐ பரிந்துரை செய்துள்ளது.
உங்களது மொபைல் பின் நம்பர் மற்றும் யுபிஐ நம்பரையும் வித்தியாசமாகவும், சீரற்றதாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
எதுவும் தெரியாத யுபிஐ கோரிக்கைகளைக்கு பதிலளிக்க வேண்டாம்.
ஒரு வேளை சந்தேகத்திற்கு உரிய கோரிக்கையாக இருந்தால் அதனை பற்றி உடனடியாக புகாரளிக்கவும்.
தொகைகள் மாற்றுவதற்கு மட்டுமே பின் தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பெறுவதற்கு எந்த பின் நம்பரும் தேவையில்லை.
உங்கள் அனுமதியின்றி ஏதேனும் பரிவர்த்தனை நடந்திருங்க்தால், உங்கள் யுபிஐ சேவையை உடனடியாக முடக்கவும். அதுபற்றி உடனடியாக புகார் அளியுங்கள்.
டெபிட்/கிரெடிட் கார்டு செக்யூரிட்டி
டெபிட்/கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மோசடிகள் மிகவும் பொதுவானவை. அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளை எஸ்பிஐ பரிந்துரைத்துள்ளது.
ஏடிஎம் அல்லது POS மூலம் பரிந்துரை செய்யும்போது கவனமாக இருங்கள். .
அதேபோல உங்களது பரிவர்த்தனையின்போது சீக்ரெட் நம்பரை பதிவிடும்போது, யாருக்கும் தெரியாமல் பதிவிடவும்.
பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முன் எப்போதும் இ-காமர்ஸ் வலைதளங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.
ஆன்லைன் வங்கி மூலம் உங்கள் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கவும்.
மொபைல் பேங்கிங் பாதுகாப்பு
மொபைல் பேங்கிங் சேவை மூலம் வலுவான பாஸ்வேர்டு/பயோமெட்ரிக் அனுமதி உங்கள் தொலைபேசிகள்/ மடிக்கணினிகள்/டெப்லெட்களில் செயல்படுத்தப்பட வேண்டும்.
உங்களது மொபைல் பின் நம்பரை யாருடனும் பகிர வேண்டாம்.
சாத்தியமான இடங்களில் பயோ மெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்த முயற்சிக்கவும்.
உங்களுக்கு தெரியாத நம்பகமில்லாத எந்த ஆப்பினையும் பயன்படுத்த வேண்டாம்.
உங்களது மொபைல் போனில், பொது வைபை வசதிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
சமூக ஊடக பாதுகாப்பு
சமூக ஊடக மூலம் நடக்கும் மோசடிகளும் அண்மை காலமாக இருந்து வரும் ஒன்றாகும். அதனை எப்படி தவிர்ப்பது வாருங்கள் பார்க்கலாம்.
நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் அடையாளத்தினை உறுதிப்படுத்தவும்.
எந்தவொரு சமூக வலைதளத்திலும் உங்களது தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை பகிர வேண்டாம்.
அதேபோல பொது இடங்களிலும் எந்த சமூக தளங்களிலும் உங்களது ரகசிய தகவல்கள் பற்றி விவாதிக்க வேண்டாம்.
இது எஸ்பிஐ மட்டும் அல்ல, மற்ற வங்கி வாடிக்கையாளார்களும் கவனமாக கையாள வேண்டும்.


Click it and Unblock the Notifications