மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023ல் பல கவர்ச்சிகரமான, பல வகையான திட்டங்களை அறிவித்த நிலையில், பல வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. சில புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளன.
குறிப்பாக ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை உயர்த்திய நிலையில், தொடர்ந்து வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
இதனால் சமீபத்திய காலமாக வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்பது கவர்ச்சிகரமான திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.
வங்கிகளில் வட்டி அதிகரிப்பு
குறிப்பாக நாட்டின் முன்னணி வங்கிகளாக எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி என பல வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இந்த வங்கிகளில் வட்டி விகிதம் என்பது 7.5 - 8% வரையில் உள்ளன.
அதே சமயம் சிறு நிதி வங்கிகளில் வட்டி விகிதம் என்பது 9.5% ஆகவும் உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டம்
இதே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் என்பது இன்னும் கவர்ச்சிகரமான திட்டங்களாக மாறியுள்ளன. சாதாரணமாகவே வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்கான திட்டம் எனும்போது, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் அதிகம். குறிப்பாக 80 வயதிற்கு மேலாக சூப்பர் சீனியர் மக்களுக்கு இன்னும் வட்டி அதிகம். ஆக தற்போது வங்கிகளும் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ள நிலையில், இவை மூத்த குடிமக்களுக்கு போதுமான திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.
மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிக்கும் வங்கிகள்
யுனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது 9.5% வரையில் வட்டி விகிதத்தினை மூத்த குடிமக்களுக்கு வழங்கி வருகின்றது. இது 1001 நாட்கள் திட்டத்திற்கு இந்த வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இதில் 181 - 201 நாட்கள் திட்டத்திற்கும், 501 நாட்கள் திட்டத்திற்கும் வட்டி விகிதம் 9.25% ஆகவும் வழங்கப்படுகின்றது. இது கடந்த பிப்ரவரி 15, 2023 முதல் வழங்கப்படுகின்றது.
சூர்யோதய ஸ்மால் பைனான்ஸ் வங்கி
சூர்யோதய ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 8.51% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 999 நாட்களுக்கான திட்டத்திற்கு 8.76% வட்டி விகிதமானது மூத்த குடி மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
இதே 2 வருடம் முதல் 999 நாட்கள் வரையிலான திட்டத்தில் 8.51% வட்டி விகிதம் வழங்கப்படும்.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு 8.80% வழங்கப்படுகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய மைக்ரோபைனான்ஸ் 7 நாள் முதல் 10 வருடம் வரையிலான டெபாசிட் திட்டங்கள் உள்ளது.
இங்கு மூத்த குடிமக்களுக்கு 0.705 வட்டி விகிதம் என்பது கூடுதலாக கிடைக்கிறது. இவ்வங்கியில் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையில் 8.80% வட்டி விகிதம் கிடைக்கலாம்.
பந்தன் வங்கி
பந்தன் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 3% முதல் 8.50% வரையில் வழங்கப்படுகின்றது. இதில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கான வட்டி விகிதம் என்பது மூத்த குடிமக்களுக்கு 0.75% கூடுதலாக கிடைக்கிறது.
இந்த மூத்த குடிமக்களுக்கு சிறப்பு திட்டத்தில் 600 நாட்கள் திட்டத்திற்கு வட்டி வீதம், 8.50% வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடிஎஃப்சி வங்கி
ஐடிஎஃப்சி வங்கியில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 0.75% வரையில் கிடைக்கிறது. இது ஐடிபிஐ நமான் மூத்த குடிமக்கள் திட்டத்தில் இந்த வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 10,000 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 2 கோடி ரூபாய் திட்டத்தில் அதிகபட்ச வரம்பாக நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.50% வரையில் வழங்கப்படலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இதில் வட்டி விகிதம் 7.5% வரையில் வழங்கப்படுகின்றது. எஸ்பிஐ வீகேர் எஃப்டி திட்டத்தில் 5 வருட திட்டத்தில் வட்டி விகிதம் 7.5% ஆக வட்டி வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் மார்ச் 31, 2023 வரையில் அமலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் 7.50% வரையில் 5 - 10 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் கிடைக்கலாம்.
இந்த திட்டம் ஏப்ரல் 7, 2023 வரையில் அமலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 7.75% வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையில் வழங்கப்படுகின்றது. இந்த வட்டி விகிதம் 2 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications