போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் திட்டங்கள் உள்பட பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதே அளவுக்கு மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால் பல ஆண்டுகளாக இந்த வட்டி விகிதம் உயராமல் அப்படியே உள்ளது. இதேவேளையில ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டியை தொடர்ந்து மூன்று முறை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தையும் போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டு எதில் அதிகம் லாபம் கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும்.

போஸ்ட் ஆபிஸ்களில் டெர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் கால அளவைப் பொருத்து 7.5 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.
ஓராண்டு டெபாசிட்களுக்கு 6.9 சதவீதமும், இரண்டாண்டு டெபாசிட்களுக்கு 7 சதவீதமும், ஐந்தாண்டு டெபாசிட்களுக்கு 7.5 சதவீத வட்டியும் தற்போது போஸ்ட் ஆபிஸில் வழங்கப்படுகிறது.
அதேவேளையில் ஹெச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட்களுக்கு கால அளவையும் டெபாசிட்தாரரின் வயதையும் பொருத்து 7.75 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. எஸ்பிஐ ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியை தருகிறது. பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ஆண்டு டெபாசிட்டுக்கு 7.6 சதவீதம் அளிக்கின்றன.
இதனால் அரசுடைமை வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸில் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட தனியார் வங்கிகள் அதிகளவு வட்டியைத் தரும் நிலை இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது அறிக்கையில் எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருமாத பணவியல் கொள்கை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ் ரெப்போ வட்டியின் பரிணாம மாற்றம் இன்னும் நடைபெறவில்லை. இதனால் டெபாசிட் விகிதமும் வட்டி விகிதமும் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதற்கு சில காலம் தேவை என கூறியுள்ளார்.
மே 2022 இல் நடந்த ஆஃப்-சைக்கிள் மீட்டிங்கில், MPC பாலிசி விகிதத்தை 40 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2023 வரையிலான ஐந்து அடுத்தடுத்த கூட்டங்களில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு அளவுகளில் வட்டி உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ரெப்போ விகிதம் 250 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications