ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்சனையால் வியாபாரம் படுத்தேவிட்டது. பெரும்பாலான மக்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தலைகாட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில், வங்கி சேவைகள், இந்த ஜூன் மாதத்தில், எந்த நாட்களுக்கு எல்லாம் இருக்கும், எந்த தேதிகளில் எல்லாம் விடுமுறை போன்றவைகளை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.
எனவே, வங்கிகள் ஜூன் 2020 மாதத்தில் என்று எல்லாம் விடுமுறையாக இருக்கும் என்கிற விவரங்களை, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் Bank Holiday தேதிகளைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.
வாடிக்கையாளர்கள்
பள்ளிக் குழந்தைகளுக்கு, ஜூன் மாதத்தில் எப்படி கூடுதல் விடுமுறைகள் இருக்காதோ, அப்படி அரசு வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு வங்கிப் பணியாளர்களுக்கும் கூடுதலாக எந்த ஒரு விடுமுறையும் இல்லை. இந்த ஜூன் மாதத்தில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எந்த தேதிகள் எல்லாம் விடுமுறை என்பதை ஆர்பிஐ அறிவித்து இருக்கிறது. அதை தேதி வாரியாகக் கீழே பார்ப்போம்.
முதல் பாதி
ஜூன் 01 - ஜூன் 15 வரையான தேதிகளில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், எந்த நாட்கள் எல்லாம் விடுமுறை என்பதைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.
ஜூன் 05 - சகா தவா (Saga Dawa)
ஜூன் 07 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 13 - இரண்டாம் சனிக்கிழமை
ஜூன் 14 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 15 - ராஜ சங்கராந்தி,Y.M.A. Day
இரண்டாம் பாதி
ஜூன் 15 - ஜூன் 30 வரையான தேதிகளில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், எந்த நாட்கள் எல்லாம் விடுமுறை என்பதைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.
ஜூன் 18 - குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள்
ஜூன் 21 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 23 - ரத யாத்திரா
ஜூன் 27 - நான்காம் சனி
ஜூன் 28 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 30 - ரேம்னா நி (Remna Ni)
தமிழகத்துக்கு
மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் வங்கி விடுமுறை பட்டியலில், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறைகள் தவிர தமிழகத்துக்கு, கூடுதலாக எந்த விடுமுறையும் இல்லை. எனவே வியாபாரிகள் மற்றும் தொழிலபதிபர்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வங்கியில் பணப் பரிவர்த்தனைகளைச் செய்தால் போதும்.


Click it and Unblock the Notifications