கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியா தொழில் துறையானது, ஒருபுறம் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இதே மறுபுறம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல், வாங்கிய கடனையும் வங்கிக்கு திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
ஏற்கனவே வங்கிகளுக்கு 6 மாதம் இஎம்ஐ-யினிய செலுத்த அவகாசம் வழங்கலாம் என்று கூறிய நிலையில், ஆகஸ்ட் மாதம் வரையில் வங்கிகள் அனுமதி கொடுத்துள்ளது.
இஎம்ஐ- செலுத்த அவகாசம்
கடந்த மார்ச் 27 அன்று முதன் முறையாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கிகள் மக்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐக்கு 3 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அதன் பின்னர் தான் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையும் 3 மாத காலம் அவகாசத்தினை நீடித்தது.
எந்தெந்த கடன்களுக்கு அனுமதி
வங்கிகள் மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான காலத்திற்கு உண்டான இஎம்ஐ தொகையினை செலுத்த வங்கிகள் அவகாசம் கொடுத்தன. மார்ச் 1-ம் தேதிக்கு முன்னர் பெற்ற அனைத்து டெர்ம் லோன்கள், சில்லறை தவணை கடன் அல்லது வேறு ஏதேனும் சில்லறை கடன், பர்சனல் லோன், வீட்டுக்கடன், ஆட்டோமொபைல்களுக்கான கடன், கிரெடிட் கார்டு நிலுவை தொகை வசதிகளைப் பெற்ற அனைத்துக்கும் அனுமதி கொடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்தது.
இஎம்ஐ அவகாசம் நீட்டிக்கப்படலாம்
இந்த நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் இஎம்ஐ அவகாசம் முடிவடைய உள்ளது. ஆனால் இன்று வரையில் விமான போக்குவரத்து, ஆட்டோமொபைல்கள் மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஆக இந்த குறிப்பிட்ட பெரும் பின்னடைவினை சந்தித்துள்ள சில துறைகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனுமதி கொடுத்துள்ளன.
நிவாரணம் அளிக்கப்படுமா?
நிறுவனங்களில் பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பு சில துறைகளுக்கு தடை நீக்கப்படலாம் என்ற கருத்துக்களும் இருந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயானது, மக்களை வீட்டிற்குள் இருக்கும் படி கட்டாயப்படுத்துகின்றது. இது விமானம், விருந்தோம்பல் உள்ளிட்ட சில துறைகளை பின்னடைவை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது. ஆக இப்படி போராடி வரும் சில துறைகளுக்கு ஆர்பிஐ சில நிவாரணம் அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார பிரச்சனை
மேலும் லாக்டவுன் காரணமான மில்லியன் கணக்கான மக்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இது பெரும் பொருளாதார பின்னடைவைவினை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது. எனினும் இந்த கடன் கால அவகாசமானது தனிப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படுவது கஷ்டம் தான் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான எந்த அறிவிப்பினையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications