பெங்களூரு: 40 வயதாக கூடிய ஒரு நபர் தான் வீடு வாங்க இருப்பதாகவும் அதற்கு தன்னுடைய மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் பணத்தை எடுத்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாமா அல்லது வங்கி கடனுக்கு செல்வது சிறந்த முடிவாக இருக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு 1 Finance நிறுவனத்தின் பர்சனல் டேக்ஸ் பிரிவு தலைவராக இருக்கும் நியாத்தி ஷா பதில் அளித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த நபர் 40 வயதானவர், ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தற்போது கட்டுமான பணியில் இருக்கக்கூடிய ஒரு குடியிருப்பை 1. 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்க திட்டமிட்டுள்ளார். இந்த வீடு 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரிடம் ஒப்படைக்கப்படுமாம்.

தனக்கு எந்த கடனும் இல்லை மாதந்தோறும் 1.2 லட்சம் ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருவதாக கூறியுள்ளார். இதுவரை 50 லட்சம் ரூபாயை தன்னுடைய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து எடுத்து வீட்டிற்காக பணமாக கட்டியிருப்பதாக கூறியுள்ளார்.
மீதமுள்ள தொகைக்கு வங்கியில் கடன் வேண்டி விண்ணப்பம் செய்திருப்பதாகவும் தனக்கு 1.12 கோடியை 8.45 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்க வங்கி தரப்பில் ஒப்புதல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.
தன்னிடம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் போர்ட் போலியோவிலேயே மீதம் உள்ள தொகையை வழங்குவதற்கு பணம் இருக்கிறது ஆனால் தான் அதை உடைத்து பணத்தை எடுத்து வீட்டை வாங்கி விடலாமா அல்லது வங்கியில் கடன் வாங்கலாமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவருக்கு பதில் அளித்துள்ள 1 Finance நிறுவனத்தின் பர்சனல் டேக்ஸ் பிரிவு தலைவர் நீயாத்தி ஷா வீடு வாங்குவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நீண்ட கால இலக்குகளுக்கு தேவையான பணத்தையும் சேமித்து வைப்பது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். வீடு ஒப்படைப்பதற்கும் இன்னும் 4 ஆண்டுகள் இருப்பதால் ப்ரீ-இஎம்ஐ முறையில் இப்போது முதலே பணம் செலுத்த தொடங்கிவிடலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஈக்விட்டி முதலீடுகள் வரலாற்று ரீதியாக சராசரியாக ஆண்டுக்கு 13% லாபம் தருகின்றன எனும்போது அந்த பணத்தை எடுத்து வீட்டில் முதலீடு செய்வது என்பது சிறந்த முடிவாக இருக்காது எனக் கூறுகிறார். ஏனெனில் தற்போது 8.45 சதவீத வட்டியில் உங்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கிறது, ஆனால் அதைவிட உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 4.5% கூடுதல் வருமானத்தை தருகிறது எனும்போது நீங்கள் இஎம்ஐ-க்கு செல்வது தான் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை எடுத்து 10 லட்சம் ரூபாய் வரை கட்டி விடலாம் என யோசனை கூறியுள்ளார். இதனால் கடனில் 10 லட்சம் குறையும், உங்களின் இஎம்ஐ தொகையும் குறையும் என தெரிவித்துள்ளார். அடுத்த 14 ஆண்டுகளில் தான் ஓய்வு பெறப்போவதாக இவர் குறிப்பிட்டுள்ள நிலையில் ஈக்விட்டி போர்ட்போலியோவில் இருக்கும் பணத்தை எடுக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications