தற்போது வங்கிகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வங்கி கணக்கில் பணத்தை வைத்தால் பிரச்சனை இல்லை என்று நினைக்கின்றனர். அது மட்டுமின்றி தங்களுடைய மதிப்பு மிக்க பொருட்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பதற்கு வங்கி லாக்கர்களைத் தான் மக்கள் நாடுகின்றனர். வங்கி லாக்கரை பயன்படுத்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
வங்கிகள் பொதுவாக அனைவருக்கும் வங்கியில் லாக்கர்களை வழங்குவதில்லை. வங்கிகளில் லாக்கர்களை பெற வாடிக்கையாளர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். லாக்கரில் நகைகள், முக்கிய ஆவணங்கள், பிற மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர்களை வழங்குகின்றன. ஆனால் சில நேரங்களில் அவை கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு. நீங்கள் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்ந்தெடுத்து லாக்கரை பெற நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் முதலில் சேமிப்புக் கணக்கை வங்கியில் திறக்க வேண்டும். அதன் பிறகு அடையாளச் சான்று, பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வழங்க வேண்டும். லாக்கர் ஒதுக்கப்பட்ட பிறகு அந்த வாடிக்கையாளர்களுக்கு தனி சாவி வழங்கப்படும். ஆனால் வங்கி முதன்மையை சாவியை வைத்திருக்கும். ஒரு வேளை உங்களுடைய லாக்கர் சாவி தொலைந்து விட்டால் இந்த முதன்மை சாவியை பயன்படுத்தி லாக்கர் திறக்கப்படும்.
ஒரு வாடிக்கையாளருக்கு லாக்கரை ஒதுக்க வங்கிகளுக்கு செக்யூரிட்டி டெபாசிட் தேவைப்படுகிறது. இந்த டெபாசிட் தொகை லாக்கர் சாவியை வங்கியில் ஒப்படைத்த பிறகு உங்களிடம் திருப்பி கொடுக்கப்படும். அதன் பிறகு லாக்கரை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் நிபந்தனைகள் போன்ற விவரங்களை எடுத்துக்காட்டும் ஆவணத்தை வங்கி உங்களுக்கு வழங்கும். வங்கியும் வாடிக்கையாளரும் சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். லாக்கர்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. ஒரு வேளை ஒரு வங்கியில் எல்லா லாக்கரும் வாடகைக்கு எடுக்கப்பட்டு விட்டால் காத்திருந்து தான் லாக்கரை பெற வேண்டும்.
லாக்கரை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு வங்கிக் கிளையின் இருப்பிடம் மற்றும் லாக்கரின் அளவைப் பொறுத்து மாறுபடும். மேலும் நீங்கள் லாக்கரை பார்வையிடுவதற்கு வரம்புகள் உள்ளன. அவற்றை மீறும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். லாக்கர் பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. ஆனால் அவை முற்றிலும் ஆபத்து இல்லாதவை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் லாக்கரில் உள்ள பொருட்களுக்கு தாங்கள் பொறுப்பு கிடையாது என்று பெரும்பாலான வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே மதிப்புமிக்க பொருட்களை வைக்கும் போது காப்பீடு செய்வது நல்லது.
வீட்டில் பாதுகாப்பானதாக இருக்காது என்று எண்ணி வங்கி லாக்கரில் தங்களுடைய மதிப்பு மிக்க பொருட்களை வைக்கும் நபர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் போன்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications