பொதுத்துறை வங்கிகளில் சமீபத்திய காலமாக வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது. இதே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், பல வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், ஒரு வங்கி வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது என்பது எவ்வளவு ஒரு நல்ல விஷயம். இது எவ்வளவு ஒரு நல்ல வாய்ப்பு? அது என்ன? எந்த வங்கி வட்டியினை குறைந்துள்ளது?
எந்த கடன்களுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது? எவ்வளவு வட்டி விகிதம்? கவனிக்க வேண்டியது என்ன வாருங்கள் பார்க்கலாம்.
வீட்டுக் கடன்
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா அதன் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் சிறு குறு மற்றும் நிறுவனங்களின் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
இதில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 8.50% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
லோன் டிரான்ஸ்பர் வசதி
இந்த வட்டி குறைப்பானது புதிய வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடன் பரிமாற்றத்திற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வட்டி விகிதங்கள் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரினை அடிப்படையாக கொண்டு இருக்கும்.
MSME கடன்
இவற்றோடு வங்கி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வட்டி விகிதத்தினையும் குறைத்துள்ளது. இது நாட்டில் தேவையானது அதிகரித்து வரும் சூழலில் இந்த வட்டி குறைப்பு என்பது மிக பயனுள்ள ஒன்றாக இருக்கலாம். இதற்கான வட்டி விகிதமும் ஆண்டுக்கு 8.40%ல் இருந்து தொடங்குகிறது.
கடைசி தேதி என்ன?
இந்த இரு கடன்களுக்குமான சலுகையானது கடந்த மார்ச் 5, 2023ல் இருந்தே தொடங்கிவிட்டது. இதனை மார்ச் 31,2023 வரையில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். ஆக இப்படி ஒரு காலத்திலும் இப்படி சான்ஸ் கிடைத்திருப்பது மிக நல்ல விஷயம் எனலாம். இது மார்ச் 5 முதல் தொடங்கியிருந்தாலும், இன்னும் சில வாரங்கள் அவகாசம் உள்ள நிலையில், பலருக்கும் பலன் அளிக்கலாம்.
வட்டி குறைப்பு
வட்டி குறைப்பு என்பது மிக நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் இது ஒரு குறுகிய கால சலுகையாகவும் உள்ளது. எப்படியிருப்பினும் பேங்க் ஆப் பரோடா வங்கியின் வட்டி அதிகரிப்பு என்பது மேற்கொண்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தூண்டும்.
பயன் அளிக்கும்
பேங்க் ஆப் பரோடாவின் இந்த சலுகையானது ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு மத்தியிலும் வந்துள்ளது.
எப்படியிருப்பினும் இது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் என்பதோடு, வாடிக்கையாளர்களுக்கும் இந்த காலகட்டத்தில் பயனுள்ள ஒன்றாக இருக்கலாம். குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த காலகட்டத்தில் இது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications