நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கி கடந்த டிசம்பர் 2022ல் 30 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஜனவரி 12 முதல் அமலுக்கு வரவுள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓவர் நைட் வட்டி விகிதம்
இந்த புதிய வட்டி விகிதத்தின் படி ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 7.85% ஆக அதிகரித்துள்ளது. இதே ஒரு மாத வட்டி விகிதமானது 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 8.15% ஆக அதிகரித்துள்ளது.
இதே 3 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதமானது, 8.05%ல் இருந்து, 8.25% ஆக அதிகரித்துள்ளது.
1 வருட எம்சிஎல்ஆர்
6 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது 8.15%ல் இருந்து, 8.35% ஆக அதிகரித்துள்ளது. இதே ஒரு ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம், 8.20%ல் இருந்து, 8.50% ஆக அதிகரித்துள்ளது.
இதே இந்த வட்டி அதிகரிப்பானது கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடனுக்கான வட்டி அதிகரிக்கலாம்
இதே சில்லறை வாடிக்கையாளர்கள், ஹவுஸிங் வாடிக்கையாளர்கள், தனி நபர் கடன் மற்றும் சிறு நிறுவன கடன் என பலவும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வங்கியின் வட்டி அதிகரிப்பானது கடனுக்கான வட்டி அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதே டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கலாம்
தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே வட்டி விகிதம் குறைவாக இருந்து வந்த நிலையில், மத்திய வங்கியானது தற்போது வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம். இது வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு மாத தவணை தொகையை அதிகமாக செலுத்த வழிவகுக்கலாம்.
பிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி
கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்தாலும், மறுபுறம் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகின்றது.
பேங்க் ஆப் பரோடாவில் கடந்த டிசம்பர் 2022 அன்று அதிகரிக்கப்பட்டது. அதன் படி,
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3%
15 - 45 நாட்களுக்கு - 3%
46 - 90 நாட்களுக்கு - 4.50%
91 - 180 - நாட்களுக்கு - 4.50%
181 - 210 நாட்களுக்கு - 5.25%
211 - 270 நாட்களுக்கு - 5.75%
271 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 5.75%
1 வருடத்திற்கு - 6.75%
1 வருடத்திற்கு மேல் 400 நாட்களுக்குள் - 6.75%
400 நாட்களுக்கு மேல் - 2 வருடத்திற்குள் - 6.75%
2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் - 6.75%
3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 6.25%
5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 6.25%
மேற்கண்ட விகிதங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications