ரிசர்வ் வங்கியானது பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பின் காரணமாக வங்கிகள் வட்டியினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
இதனால் கடன்களுக்கான விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனி மாத தவணைத் தொகையிலும் எதிரொலிக்கலாம் எனலாம்.
இன்று ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்திய நிலையில், பேங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
வட்டி அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா, ரெப்போ விகிதத்தின் அடிப்படையிலான வட்டி விகிதத்தினை (RBLR) அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது இன்று அமலுக்கு வந்துள்ளது. பேங்க் ஆப் இந்தியாவின் இந்த வட்டி அதிகரிப்பினால், வட்டி விகிதம் இன்று முதல் 9.10% ஆக அதிகரித்துள்ளது.
கடன் விகிதம்
பெஞ்ச் மார்க் கடன் விகிதங்கள் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) அல்லது ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) ஆக இருக்கலாம். இது ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பினை செய்யும்போதெல்லாம், கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம்.
ஆர்பிஐ-யின் முடிவென்ன?
கடன்களுக்கான வட்டி விகிதத்தினை ரிசர் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்து வருகின்றது. இந்த முறை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக 5வது முறையாக ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
பேங்க் ஆப் இந்தியா MCLR
பேங்க் ஆப் இந்தியாவின் வட்டி விகிதம் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒவர் நைட் விகிதம் - 7.30%
1 மாத எம் சி எல் ஆர் விகிதம் - 7.65%
3 மாத எம் சி எல் ஆர் விகிதம் - 7.70%
6 மாத எம் சி எல் ஆர் விகிதம் - 7.90%
1 வருட எம் சி எல் ஆர் விகிதம் - 8.15%
3 வருட எம் சி எல் ஆர் விகிதம் - 8.35%
இன்றைய பங்கு விலை நிலவரம்?
என் எஸ் இ-யில் பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலையானது இன்று 2.82%ம் அதிகரித்து, 92.85% ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 95.20 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 90.55 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலையானது இன்று 2.88%ம் அதிகரித்து, 92.85% ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 95.15 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 90.50 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 95.15 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 40.40 ரூபாயாகும்.
இனி மற்ற வங்கிகளும் அதிகரிக்கலாம்?
பேங்க் ஆப் இந்தியா வங்கியினை தொடர்ந்து மற்ற வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தவணை தொகையை அதிகரிக்க வழிவகுக்கலாம். இனி வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக உங்கள் மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம். இதனால் இனி நீங்கள் மாத மாதம் கூடுதல் தவணை தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications