நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடர்ந்து ஒரு வாரத்தில், பிக்ஸட் டெபாசிட் தொகைக்கு இரண்டாவது முறையாக வட்டியினை உயர்த்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
ஏற்கனவே ஐடிபிஐ வங்கி, ஆகஸிஸ் வங்கி, யெஸ் வங்கி, யூனியன் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
இருமுறை வட்டி அதிகரிப்பு
எஸ்பிஐ (SBI) அக்டோபர் 15 முதல் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இது மீண்டும் அக்டோபர் 21 அன்று உயர்த்தியது. இந்த புதிய விகிதங்கள் அக்டோபர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.
அக்டோபர் 15 அன்று பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்தது. தற்போது டெர்ம் திட்டங்களுக்கு 0.8% வரையில் அதிகரித்துள்ளது.
எவ்வளவு வட்டி விகிதம்?
அக்டோபர் 15, 2022 நிலவரப்படி . (பொதுமக்களுக்கு)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.65%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.70%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.60%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.65%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.80%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.85%
அக்டோபர் 15, 2022 நிலவரப்படி, (மூத்த குடி மக்களுக்கு)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.50%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.50%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.15%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 5.20%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.60%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 6.15%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 6.30%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 6.65%
இரண்டாவது முறையாக அதிகரிப்பு
அக்டோபர் 22, 2022 நிலவரப்படி, (பொதுமக்களுக்கு)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.50%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.25%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 5.50%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.10%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 6.25%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 6.10%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 6.10%
அக்டோபர் 22, 2022 நிலவரப்படி, (மூத்த குடி மக்களுக்கு)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.50%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 5%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.75%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 6%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.60%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 6.75%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 6.60%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 6.90%
பாதுகாப்பான திட்டம்
மற்ற முதலீட்டு திட்டங்களை காட்டிலும் வங்கி வைப்பு நிதிகள் நிலையான வருமானம் தரும் திட்டங்களாக உள்ளன. இதில் சந்தை அபாயம் கிடையாது. வருமானம் குறைவாக கிடைத்தாலும் பாதுகாப்பானதாக உள்ளது. மொத்தத்தில் தற்போது வட்டி அதிகரிப்பால் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனலாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications