கிரெடிட் கார்டு அல்லது கடன் பெற வங்கிகளுக்குச் செல்லும்போது உடனடியாக உங்கள் சிபில் ஸ்கோரை தான் ஊழியர்கள் சரி பார்ப்பார்கள். கிரெடிட் கார்டு வழங்குவதற்கும் சிபில் ஸ்கோர் முக்கியம். அதிகமாக சிபில் ஸ்கோர் இருந்தால் எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் கடன் பெறலாம் அல்லது கிரெடிட் கார்டும் பெறலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கலாமா என்பது குறித்து யோசித்து தான் முடிவு எடுக்கும். இந்தப் பதிவில் ஒருவர் கிரெடிட் கார்டு பெற நினைத்தால் எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?: சிபில் ஸ்கோர் என்பது 3 இலக்க எண்.இதன் வரம்பு 300 முதல் 900 வரை இருக்கும். இந்த சிபில் ஸ்கோரை வைத்து தான் கடன் வழங்குனர்கள் உங்களால் கடனை சரிவரச் செலுத்த முடியுமா? முடியாதா? என்பதை தெரிந்து கொள்வார்கள். இதற்கு முன்னர் நீங்கள் வாங்கிய கடனை எப்படி செலுத்தி இருக்கிறீர்கள்?, எந்த தேதியில் செலுத்தி இருக்கிறீர்கள்?, சரியாக செலுத்தி இருக்கிறீர்களா?, ஏதேனும் தவணையை தவற விட்டீர்களா? என்ற அனைத்து விவரங்களையும் வங்கிகள் சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் கண்டுபிடித்து விடும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே கடன் பெற்று அதை சரிவர செலுத்தாமல் இருந்தால் உங்களுடைய சிபில் சிவில் ஸ்கோர் குறைவாகத்தான் இருக்கும்.

எவ்வளவு சிபில் ஸ்கோர் இருந்தால் கிரெடிட் கார்டு பெறலாம்?: உங்களுடைய சிபில் ஸ்கோர் 300 முதல் 500-க்குள் இருந்தால் இது மோசமான கிரெடிட் ஸ்கோராக கருதப்படுகிறது. அதுவே உங்கள் கிரெடிட் ஸ்கோர் 500 முதல் 650 வரை இருந்தால்.. இது சராசரியான சிபில் ஸ்கோராக கருதப்படுகிறது.
அதுவே உங்களுடைய சிபில் 650 முதல் 750 வரையில் இருந்தால் இது சிறந்த சிபில் ஸ்கோராக கருதப்படும். 750 முதல் 900-திற்க்கும் இடையில் இருந்தால் இவை இருப்பதிலேயே நல்ல ஸ்கோராக கருதப்படும். 750 க்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கண்டிப்பாக கிரெடிட் கார்டு பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 750-க்கும் மேல் சிபில் இருப்பவர்கள் எளிதாக கிரெடிட் கார்டு பெறலாம்.
சிபில் ஸ்கோர் அதிகமாக இருப்பதன் நன்மைகள்: உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் நீங்கள் பல நன்மைகளை பெறலாம். வங்கிகளில் கடன் பெறும் செயல்முறையில் எந்த பிரச்சனையும் இருக்காது. அதோடு சிறந்த கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஷன்களும் இதற்கு வழங்கப்படுகிறது. இதை வைத்து சில நிமிடங்களில் பணம் பெறலாம்.
எதிர்காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் கிரெடிட் கார்டு அல்லது கடன் பெற விரும்புபவர்கள், ஏற்கனவே பெற்றிருக்கும் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது முக்கியம்.


Click it and Unblock the Notifications