இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட் என்பது மிக முக்கியமான வங்கி முதலீடுகளில் ஒன்றாகும்.
இது ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒரு குறிப்பிட்ட வருவாயினைத் தரும் முக்கிய முதலீடாகும். பெரும்பாலும் முதலீட்டின் கால வரம்பு, வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் மாறுவதில்லை.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் குறையும் போது, இதுபோன்ற முதலீடுகளுக்கும் வட்டி குறைகிறது. ஆனால் இது பாதுக்காப்பான ஒரு முதலீடாக இருப்பதால், இன்றைய காலகட்டத்திலும் வட்டி குறைவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனையே நாடி செல்கின்றனர்.
பிகஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்
இந்த வட்டி விகிதங்கள் ஒரு வங்கியை விட மற்றொரு வங்கியுடன் ஒப்பிடும்போது சற்று வேறுபடுகின்றன. இதே வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்களில் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. பொதுவாக இந்த பிக்ஸட் டெபாசிட்களுக்காக கால வரம்பு 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் 2.5% முதல் 7.5% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாக காணப்படுகிறது.
முன்னணி வங்கிகள்
நாட்டின் முன்னணி வங்கிளான எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் முதலீட்டு கால வரம்பானது 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் கிட்டதட்ட 7% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாக காணப்படுகிறது.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி
- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.50%
- 15 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் -4.25%
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 5.50%
- 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 6.00%
- 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.50%
- 1 வருடத்திற்கு - 6.90%
- 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 7.00%
- 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 7.50%
- 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 7.00%
- 5 வருடத்திற்கு 7.00%
- 5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் -6.50%
2 கோடி ரூபாய் உள்ள டெபாசிட்களுக்கு இந்த விகிதமாகும். மேற்கண்ட இந்த வட்டி விகிதம் ஆகஸ்ட் 11-லிருந்து வழங்கப்படுகிறது. இதிலிருந்து மூத்த குடிமக்களுக்கு 8% வரையில் வழங்கப்படுகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம், சாதாரண குடிமக்களுக்காக வட்டி விகிதத்தினை அதிகமாகும்.
- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.00%
- 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.25%
- 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.00%
- 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.00%
- 365 நாட்கள் முதல் 699 நாட்கள் வரையில் - 6.75%
- 700 நாட்களுக்கு - 7.00%
- 701 நாட்கள் முதல் 3652 நாட்கள் வரையில் - 6.75%
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.50%
- 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.70%
- 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.10%
- 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.30%
- 12 மாதம் முதல் 15 மாதம் வரையில் - 6.50%
- 15 மாதம் 1 நாள் முதல் 18 மாதம் வரையில் - 6.50%
- 18 மாதம் 1 நாள் முதல் 21 மாதம் வரையில் - 6.80%
- 21 மாதம் 1 நாள் முதல் 24 மாதம் வரையில் - 6.80%
- 24 மாதம் 1 நாள் முதல் 30 மாதம் வரையில் - 6.80%
- 30 மாதம் 1 நாள் முதல் 36 மாதம் வரையில் - 6.90%
- 3 வருடம் 1 நாள் முதல் 42 மாதம் வரையில் - 7.00%
- 42 மாதம் 1 நாள் முதல் 48 மாதங்கள் வரையில் - 6.50%
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications