இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் குறைந்து வரும் வேளையில் ஆர்பிஐ நாட்டில் போதுமான பணபுழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடத்தில் 1 சதவீத வரையிலான ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் வங்கிகள் இந்த பலனை மெல்ல மெல்ல மக்களுக்கு அளித்து வருகிறது.
இந்த வகையில் வங்கி ஆஃப் பரோடா (BoB), இந்தியன் வங்கி மற்றும் IDBI வங்கி ஆகியவை அக்டோபர் மாதத்தில் தங்களின் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (MCLR) விகிதங்களை சில காலக்கெடுகளுக்கு குறைத்துள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் MCLR விகிதம் உடன் இணைக்கப்பட்ட கடன்களை வாங்கியிருப்போரின் EMI குறைய உள்ளது.

ரிசர்வ் வங்கி அக்டோபர் 2025 நாணய கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை 5.50% என்ற நிலையாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் வங்கிகளின் தற்போதை வட்டி குறைப்பு மூலம் வீட்டு கடன், பர்சனல் லோன் மற்றும் வாகன கடன்களில் EMI குறைவும்.
பேங்க் ஆஃப் பரோடா (BoB)
பேங்க் ஆஃப் பரோடா (BoB) தனது MCLR விகிதங்களை அக்டோபர் 12, 2025 முதல் திருத்தியுள்ளது. ஒரு நாள் MCLR 7.85% ஆக உள்ள நிலையில், ஒரு மாத MCLR 7.95%-லிருந்து 7.90% ஆக குறைந்துள்ளது. மூன்று மாத MCLR 8.20% மற்றும் ஆறு மாத MCLR 8.65%-லிருந்து 8.60% ஆக குறைந்துள்ளது. ஒரு ஆண்டு MCLR 8.80%-லிருந்து 8.75% ஆக சரிந்துள்ளது.
இந்தியன் பேங்க்
இந்தியன் பேங்க், அக்டோபர் 3, 2025 முதல் ஒரு நாள் MCLR-ஐ 8.05%-லிருந்து 7.95% மற்றும் ஒரு மாத MCLR-ஐ 8.30%-லிருந்து 8.25% ஆக குறைத்துள்ளது. மூன்று மாத, ஆறு மாத மற்றும் ஒரு ஆண்டு MCLR விகிதங்கள் மாறாமல் 8.45%, 8.70% மற்றும் 8.85% ஆக உள்ளன.
IDBI வங்கி
IDBI வங்கி, அக்டோபர் 12, 2025 முதல் தனது MCLR விகிதங்களை சரிசெய்துள்ளது. ஒரு நாள் MCLR 8.05%-லிருந்து 8% மற்றும் ஒரு மாத MCLR 8.20%-லிருந்து 8.15% ஆக குறைந்துள்ளது. மூன்று மாத MCLR 8.50%, ஆறு மாத MCLR 8.70%, ஒரு ஆண்டு 8.75%, இரண்டு ஆண்டு 9.30% மற்றும் மூன்று ஆண்டு 9.70% ஆக உள்ளன, மாற்றமில்லை.


Click it and Unblock the Notifications