இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 புள்ளிகள் அதிகரித்து 5.9 சதவீதமாக அறிவித்தது.
தொடர்ந்து பல வங்கி நிறுவனங்கள் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்து வருகின்றன.
அப்படி 7 சதவீத வட்டி விகிதத்திற்கும் அதிகமாக பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு லாபம் வழங்கும் வங்கி பட்டியலை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
கனரா வங்கி
பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி 666 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசி திட்டத்துக்கு 7 சதவீத வட்டி விகித லாபம் வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவிகிதம் என 7.50 சதவிகித லாபம் வழங்குகிறது.
ஐடிஎப்சி வங்கி
ஐடிஎப்சி வங்கி 750 நாட்களில் முதிர்வடையும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.25 சதவீத வட்டி விகித லாபத்தை வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவிகித லாபம் வழங்கப்படுகிறது.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கி 15 மாதத்தில் முதிர்வடையும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7 சதவிகித லாபத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் எனில் 7.5 சதவிகித லாபம் வழங்கப்படுகிறது. 725 நாட்கள் வரை டெபாசிட் செய்யும் போது பொது மக்களுக்கு 7.25 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவிகித வட்டி விகித லாபமும் வழங்கப்படுகிறது.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 1 வருடம் முதல் 5 வருடம் வரை முதலீடு செய்யும் பொது 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவிகித லாபம் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications