தமிழகத்தில் நாளை முதல் வங்கி வேலை நேரம் குறைப்பு.. முழு விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலையானது மிக தீவிரமாக வீசிக் கொண்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது.

 

இதற்கிடையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நாளை முதல் பல கட்டுப்பாடுகள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. அதன் ஒரு பகுதியாக வங்கிகள் செயல்படும் நேரம் நாளை முதல் குறைக்கப்பட்டு உள்ளது.

வங்கி வேலை நேரம் குறைப்பு

வங்கி வேலை நேரம் குறைப்பு

இது தொடர்பாக மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவல் என்பது தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், வங்கி ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஆக நாளை முதல் காலை 10 மணி - மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளது.

இந்த ஊழியர்களுக்கு சலுகை

இந்த ஊழியர்களுக்கு சலுகை

வங்கி வேலை நேரம் மட்டும் அல்ல, கர்ப்பிணி பணியாளர்கள், உடல் நலன் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் ஏடிஎம்கள் வழக்கம்போல 24 மணி நேரமும் செயல்படும் என அறிவித்துள்ளது. அதோடு தகுதி வாய்ந்த பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள்
 

ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள்

அதே போல வங்கியில் ஊழியர்கல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மகராஷ்டிரா நேர குறைப்பு செய்துள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நாட்கள்?

எவ்வளவு நாட்கள்?

வங்கி நேரம் குறைப்பு செய்யப்பட்டுள்ளதே, எத்தனை நாட்களுக்கு இப்படி? தற்போதைக்கு ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை இந்த நேரம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நிலைமை பொறுத்து, இன்னும் நேரத்தினை அதிகரிப்பதா? அல்லது குறைப்பதா? என அறிவிக்கப்படும். மேலும் வங்கிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்களை SLBC-TN வெளியிட்டுள்ளது.

இந்த சேவைகள் நிறுத்தம்

இந்த சேவைகள் நிறுத்தம்

ஆதார் சேர்க்கை மைய செயல்பாடுகள் நிறுத்தப்படும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் கிளைகள், ஏதேனும் இருந்தால் பொருத்தமான அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களால் தொடர்ந்து வழிநடத்தப்படும்.

வங்கி ஏடிஎம்கள், கேஸ் டெபாசிட் மெஷின்கள், கேஷ் மறுசுழற்சி மாற்று வினியோக சேனல்களும் செயல்பட வேண்டும்.

தகுதி வாய்ந்த வங்கி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளார்களை வங்கிக்கு வராமல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முடிந்த மட்டில் ஊக்குவிக்குமாறு கூறியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks working hours reduced in Tamilnadu due to coronavirus: check new timings

Bank alert.. Banks working hours reduced in Tamilnadu due to coronavirus: check new timings
Story first published: Sunday, April 25, 2021, 18:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X