சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் அல்லது SIP என்பது முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு வகையான முதலீட்டு திட்டமாகும். இதன் கீழ், முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தவறாமல் முதலீடு செய்யலாம். இது வாரந்திரம், மாதாந்திரம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்தப் பதிவில் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டில் 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நீங்கள் வெறும் ரூ.100 முதல் SIP முதலீட்டைத் தொடங்கலாம். இருப்பினும் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 முதல் SIP திட்டத்தை வழங்குகின்றன.

இன்றைய சூழலில் முதலீட்டாளர்கள் SIP முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP திட்டத்தில் ரூ.23,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
SIP திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: தினமும் 100 ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தால் மாதத்திற்கு 3000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் 12% வருடாந்திர வருமானத்தை பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 30 ஆண்டுகளில் மொத்தம் ரூ.10,80,000 முதலீடு செய்திருப்பீர்கள். SIP கால்குலேட்டரின் படி தொடர்ந்து 30 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் 1,05,89,741 ரூபாய் குவிக்க முடியும். இதன்படி உங்கள் மொத்த வருமானம் ரூ.95,09,741 ஆக இருக்கும்.
SIP திட்டத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: தினமும் 500 ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தால் மாதத்திற்கு 15,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் 12% வருடாந்திர வருமானத்தை பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 17 ஆண்டுகளில் மொத்தம் ரூ.30,60,000 முதலீடு செய்திருப்பீர்கள். SIP கால்குலேட்டரின் படி தொடர்ந்து 17 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் 1,00,18,812 ரூபாய் குவிக்க முடியும். இதன்படி உங்கள் மொத்த வருமானம் ரூ.69,58,812. ஆக இருக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல் ஒரு நாளைக்கு 100 ரூபாய் அல்லது 500 ரூபாய் SIP திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே. உங்களுக்கு ஏற்ப எவ்வளவு தொகை முதலீடு செய்ய இருக்கிறீர்கள்.. அதனால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. மேலும் நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்ற விவரங்களை வைத்து உங்களுடைய வருமானத்தை SIP கால்குலேட்டர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
SIP முதலீடுகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் இது கூட்டு வட்டியை வழங்குகிறது. அதாவது உங்களுடைய முதலீட்டுக்கு முதலில் வட்டி கிடைக்கும். அதன் பின் அந்த வட்டிக்கும் முதலீட்டுக்கும் சேர்த்து மீண்டும் வட்டி கிடைக்கும். இதே போல வட்டிக்கு வட்டி அளிக்கப்படுவதால் உங்களுடைய முதலீடு குறுகிய காலத்தில் அதிகமாக வளர வாய்ப்புண்டு. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால் ஏற்கனவே ஒரு ஃபண்ட் அளித்த வருமானத்தை வைத்து இனிவரும் நாட்களும் அதே போல வருமானம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.
மேலே கூறிய விவரங்களை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications