கோடீஸ்வரராக வேண்டும் என்று யாருக்குத்தான் கனவு இருக்காது? கண்டிப்பாக அனைவருக்கும் இருக்கும் ஆசை தான் அது. சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் மற்ற சிறு தொழில் செய்பவர்களுக்கும் இது சாத்தியமற்றது என தோன்றலாம். ஆனால் இந்த இலக்கு அப்படி ஒன்றும் கஷ்டமானது அல்ல. இந்த பதிவில் உங்களை கோடீஸ்வரராக மாற்றும் சில யுக்திகளைப் பார்ப்போம்.
பணக்காரராக வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக ஒரு சிலருக்கு ஒரு கோடியை அடைய வேண்டும் என்ற நிதி இலக்கு இருக்கும். இதை அடைந்து விட்டாலே தனக்கு நிதி சுதந்திரம் கிடைத்தது போல உணர்வார்கள். எனவே அவரவரைப் பொறுத்து இந்த இலக்கு மாறுபட்டாலும், நீங்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஒன்றாகத்தான் இருக்கும்.

ஆரம்பத்தில், முதலீடுகள் செய்வது நிதி நிபுணர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. ஆனால் இப்போது டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டன. அதில் நீங்கள் பல வகையான முதலீடு திட்டங்களை பார்க்கலாம். இது மக்கள் தங்களுடைய நிதி இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சரியான முறையில் முதலீடு செய்து தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம், யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரராகலாம். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் மட்டுமே போதாது, உங்கள் நிதித் திட்டத்தில் இன்னும் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்களை கோடீஸ்வரராக மாற்ற உதவும் 5 டிப்ஸ்களைப் பார்ப்போம்.
முதலீடு செய்தல்: கோடீஸ்வரராக மாறுவதற்கு மிக முக்கியமான ஒன்று முதலீடு செய்வதாகும். அதனை செய்ய நீங்கள் சரியாக யோசித்து சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம், உங்கள் முதலீட்டில் ஏற்படும் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். எப்பொழுதும் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும்.
பல்வகைப்படுத்தல் முக்கியமானது: அனைத்து பணக்காரர்களும் பன்முகத்தன்மையின் அடிப்படையில் முதலீடு செய்கிறனர். ரியல் எஸ்டேட், பங்கு சந்தைகள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், அரசாங்க திட்டங்கள், பத்திரங்கள் போன்ற மாற்று முதலீடுகள் மூலம் பல்வகைப்படுத்துவது சிறந்தது.
எளிதாகச் சொல்லப்போனால், உங்களுடைய வருமானம் ஈட்டும் வழிகளை அதிகப்படுத்துவது என்று வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு வழியில் இருந்து பெறப்படும் வருமானம் எளிதில் பணம் சம்பாதிக்க ஏற்றதாக இருக்காது. எனவே பல வழிகளில் இருந்தும் வருமானம் ஈட்டும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
50-30-20 விதியைப் பயன்படுத்தலாம்: 50 சதவீதம் தேவைகளுக்காகவும், 30 சதவீதம் உங்கள் விருப்பத்திற்காகவும், 20 சதவீதம் சேமிப்புக்காகவும் ஒதுக்க வேண்டும். இந்த விதியைப் பின்பற்றுவதன் மூலம், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முடியும்.
மேலும் இந்த விதியை பயன்படுத்தும் போது தேவை மற்றும் விருப்பம் ஆகிய இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தான் இருக்கிறது என்று உங்களுக்கு குழப்பம் வரலாம். இங்கு தான் பிரச்சனை. தேவை மற்றும் விருப்பம் ஆகிய இரண்டும் வெவ்வேறு.
தேவை என்பது அடிப்படையான விஷயங்களைக் குறிக்கிறது. உதாரணமாக வீட்டு வாடகை, மளிகை சாமான் போன்றவை இதில் அடங்கும். விருப்பம் என்பது வீட்டில் சமைத்து வைத்திருக்கும் போது உங்களுக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். ஆக வீட்டில் இருக்கும் உணவை சாப்பிட்டாலும்.. பசி அடங்கும். மாறாக கடையில் சென்று பிரியாணி சாப்பிட வேண்டும் என்று எண்ணுவது தான் விருப்பம். எனவே விருப்பம் மற்றும் தேவை ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டாலே உங்களால் அதிலிருந்து ஒரு தொகையை சேமிக்க முடியும்.
அவசரத் தேவைகளுக்கான செலவுகள்: வாழ்க்கையில், அனைவரும் ஏதோ ஒரு தருணத்தில் அவசரம் அல்லது எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அது சுகாதார நெருக்கடியாகக் கூட இருக்கலாம். எனவே, இதுபோன்ற நேரங்களில் நிதி நெருக்கடியைத் தவிர்க்க காப்பீட்டு திட்டங்களை வைத்திருப்பது அவசியம். உங்களது முதலீட்டுத் திட்டங்களில் உடல்நலக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
தேவையில்லாத ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்வதை நிறுத்துங்கள்: பல நடுத்தர மக்கள், விலையுயர்ந்த ஆக்சஸரீஸ்கள், பட்ஜெட்டில் இல்லாத வீடுகள், ஆடம்பரமான கார்கள் மற்றும் கேஜெட்டுகள் போன்ற ஆடம்பர பொருட்களை வாங்குவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.
இது போன்ற தேவையற்ற செலவுகளை செய்வதன் மூலம் சரியான முறையில் சேமிக்க முடியாது. இதன் விளைவாக முடிவில்லாத EMI-கள், கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில்கள் போன்ற செலவுகளும்அதிகரித்துக் கொண்டே இருக்கும். இது போன்ற சமயங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற கார், மொபைல் மற்றும் வீடுகளை வாங்க வேண்டும். தேவையற்ற கேட்ஜெட்கள், ஆக்சஸரீஸ்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சிறு சேமிப்புகள் உங்கள் எதிர்காலத்திற்கு பெரிதாக உதவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications