ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

இந்தியாவை சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் எப்படியாவது ஒரு கோடி ரூபாய் என்ற சொத்தினை சேர்த்து கோடீஸ்வரனாகிவிட வேண்டும் என கனவு காண்கிறார்கள். ஆனால் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பது, பணவீக்கம், விலைவாசி உயர்வு ,தேவையற்ற செலவினங்கள் உயர்வது உள்ளிட்டவை காரணமாக நம்முடைய சம்பளம் உயர்ந்தாலும் நம்மால் அந்த ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட முடிவது கிடையாது.

நீங்க சரியான திட்டங்களில் ஒழுக்கமான முறையில் முதலீடு செய்தால் மட்டுமே குறைந்த சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் கூட ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை எளிதாக எட்ட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். அந்த வகையில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் எஸ்ஐபி (SIP) முறையில் மக்கள் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என அறிவுறுத்துகின்றனர்.

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

தற்போதுள்ள பல்வேறு இளைஞர்கள் மத்தியிலும் எஸ்ஐபி முறையில் பணத்தை முதலீடு செய்வதுதான் பிரபலமாக இருந்த வருகிறது. இப்படி sip -இல் நாம் பணத்தை முதலீடு செய்யும் போது காம்பவுண்டிங் மூலம் நம்முடைய பணம் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு வேகமான வளர்ச்சியை தரும். அந்த வகையில் மாதம் தோறும் 20,000 ரூபாய் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் நமக்கு 1 கோடி ரூபாய் நிதி தொகுப்பு கிடைக்கும் என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நபர் மாதம் தோறும் 20,000 ரூபாய் முதலீடு செய்கிறார் எனும்போது அவருடைய முதலீட்டு திட்டம் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீத லாபம் தருகிறது என்றால் 16 ஆண்டுகளில் அவர் நினைத்த இலக்கை எட்டி விட முடியும். அதாவது தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாயை தொடர்ச்சியாக எஸ்ஐபி செய்து வர வேண்டும். 16 ஆண்டுகள் முடிவில் நீங்கள் முதலீடு செய்த பணம் 36,00000 ரூபாயாகவும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கக்கூடிய லாபம் 64 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும்.

அந்த வகையில் பார்த்தால் 16 ஆண்டுகள் முடிவடையும் போது உங்களுடைய கையில் 1 கோடி ரூபாய் இருக்கும். ஒழுக்கமான முறையில் தொடர்ச்சியாக எஸ்ஐபிகளில் முதலீடு செய்யும் போது அது நாம் செய்த முதலீட்டை விட கூடுதலாக லாபம் தரும் என்பதற்கு இது ஒரு மிக முக்கியமான சான்று. மாதம் 20,000 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 666 ரூபாய் தான்.

இதுவே உங்களுடைய எஸ்ஐபி திட்டத்தை நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஸ்டெப் அப் முறையில் அதிகரிக்கும் போது 1 கோடி ரூபாய் என்ற இலக்கை 12 ஆண்டுகளிலேயே எட்டி விட முடியும். அதாவது நீங்கள் மாதம் தோறும் 20,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் அது ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தருகிறது ஒவ்வொரு ஆண்டும் இந்த 20,000 முதலீடு தொகையை 10% என உயர்த்தி கொண்டே செல்ல வேண்டும். அப்படி பார்க்கும்போது 13 ஆண்டுகள் முடியும்போது நீங்கள் செய்த முதலீடு 51,32,172 ரூபாயாக இருக்கும் உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய பணம் 49 ,16,427 கோடி ரூபாய்.

அதாவது உங்களுக்கு 13 ஆண்டுகள் முடியும்போதே 1 கோடி ரூபாய் என்ற இலக்கு கிடைத்துவிடும். இந்த பணத்தை நீங்கள் எடுக்காமல் அப்படியே சில ஆண்டுகள் விடுத்தால் பல கோடிகளாக திரும்ப கிடைக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார் என கூறுவதை போல முதலீடு வளரும் வரை பொறுத்திருந்தால் அதன் முழு பலனையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+