மியூச்சுவல் ஃபண்டு, கிரிப்டோ என பல்வேறு முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் நம்மூரில் வாழும் மக்களுக்கு பிடித்த திட்டம் என்னவோ பிக்சட் டெபாசிட் (FD) திட்டம் மட்டும் தான். முதலுக்கே மோசம் வந்துவிடக்கூடாது என்று நினைக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கு FD திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தற்போது FD திட்டங்களுக்கு வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. இந்தப் பதிவில் 1 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட திட்டங்களுக்கு வெவ்வேறு தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? என்பதைப் பார்ப்போம்.

1 வருட FD திட்டங்கள்: இன்னும் 1 வருடத்தில் அவசர பணத் தேவை இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 1 வருட திட்டங்களுக்கு வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகிறது. பொதுமக்களுக்கு 6.20% முதல் 7.40 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 6.70% முதல் 7.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
வங்கிகளின் வட்டி விகிதங்கள்: IDFC ஃபர்ஸ்ட் பேங்க் 7.40%, பந்தன் பேங்க் 7.25%, மற்றும் RBL பேங்க் 7.20% வரை அதிகபட்ச வட்டியை வழங்குகின்றன. அடுத்ததாக HDFC பேங்க், ICICI பேங்க் போன்ற பிற தனியார் பேங்குகள் 6.25% முதல் 6.45 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பப்ளிக் செக்டார் பேங்குகள் 6.10 சதவீதம் முதல் 6.40 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
3 வருட FD திட்டங்கள்: இன்றைய சூழலில் வட்டியும் கிடைக்க வேண்டும், அதே சமயம் நீண்ட காலத்திற்கு தங்களுடைய பணத்தை டெபாசிட் செய்ய விருப்பமில்லை என்று நினைப்பவர்கள் இந்த திட்டத்தினை தேர்வு செய்யலாம், இதற்கு முன்னணி வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகிறது, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 3 வருட FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதமும், ஆர்பிஎல் பேங்க் 7.20 சதவீதம் மற்றும் பந்தன் பேங்க் 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதில் மூத்த குடிமக்களாக இருந்தால் 7.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரம் பொதுத்துறை வங்கிகள் 6.20% முதல் 6.60 சதவீதம் வரையிலான வட்டியை வழங்குகிறது.
5 வருட FD திட்டங்கள்: நீண்ட கால நிதி இலக்கிற்காக சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 5 ஆண்டு FD திட்டங்களைத் தேர்வு செய்யலாம். உதாரணமாக வரி சேமிப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற செலவுகளுக்கு ஐந்தாண்டு திட்டம் ஏற்றதாக இருக்கும். ஆனால் குறுகிய காலத்திட்டங்களை விட இதுபோன்ற நீண்ட கால திட்டங்களில் வட்டி சற்று குறைவு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஐந்தாண்டு FD திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 5.85% முதல் 6.75% வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
வங்கிகளின் வட்டி விகிதங்கள்: ஐசிஐசிஐ பேங்க் 6.50 சதவீதமும், யெஸ் பேங்க் 6.75%, ICICI பேங்க் 6.50% வட்டி வழங்குகின்றன. அதேபோல ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 6.05 சதவீதம் மற்றும் பிஎன்பி பேங்க் 6 சதவீதமும், பந்தன் பேங்க் 5.85 சதவீதமும் வட்டி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications