உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் தங்கள் குழந்தைகள் பிறந்ததுமே அவர்களுக்கான முதலீடுகளையும் துவங்கி விடவேண்டும் என்று திட்டமிடுவார்கள்.

 

ஆனால் குழந்தைகள் பிறந்ததும் அதனை மறந்து விடுகின்றனர். ஏனெனில் பல்வேறு புதுபுது செலவுகளுக்கு மத்தியில், அதனை மறந்து விடுகின்றனர்.

ஆனால் அவர்கள் பெரியவர் ஆக ஆக செலவினங்கள் கூடிக் கொண்டே தான் போகிறது. இதனால் கடைசி வரை நம்மால் சேமிப்பு என்பதை பற்றி நினைக்கவே முடிவதில்லை.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் விஷனில் என்ன சலுகை?

ஆதித்யா பிர்லா சன் லைஃப் விஷனில் என்ன சலுகை?

அந்த வகையில் இன்று நாம் சில திட்டங்களை பார்க்க இருக்கிறோம். முதலாவது ஆதித்யா பிர்லா சன் லைஃப் விஷன் ஸ்டார் குழந்தைகள் திட்டம் (Aditya Birla Sun Life Vision Star Child plan) இந்த திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை இணைந்து கொள்ளலாம். இதன் முதிர்வுகாலம் 75 வயதாகும். இதில் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் நிர்ணயிக்கப்படவில்லை. ஏனெனில் உங்களது எதிர்பார்ப்பினை பொறுத்து நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.

ஏகோன் லைஃப் ரைஸ் ஸ்டார்

ஏகோன் லைஃப் ரைஸ் ஸ்டார்

ஏகோன் லைஃப் ரைஸ் ஸ்டார் குழந்தைகளுக்கான திட்டம் 18 வயது முதல் 48 வயது வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 65 வயதாகும். இந்த பாலிசியில் குறைந்தபட்ச பிரீமியம் வருடத்திற்கு 20,000 ரூபாயாகும் (Annual mode). இதே மற்ற பிரீமிய மோடுகளில் குறைந்தபட்சம் வருடத்திற்கு 30,000 ரூபாயாகும்.

பஜாஜ் அலையன்ஸ் யங் அஸ்யூரன்ஸ்
 

பஜாஜ் அலையன்ஸ் யங் அஸ்யூரன்ஸ்

பஜாஜ் அலையன்ஸின் யங் அஸ்யூரன்ஸ் சைல்டு பிளானில் (Bajaj Allianz Young Assurance Child Plan) 18 வயது முதல் 50 வயது வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 60 வயதாகும். இதில் குறைந்தபட்சம் பிரிமீயம் என்பது கிடையாது. இந்த பாலிசியில் முதிர்வு தொகையானது வருட பிரீமியத்தில் 10 மடங்கு இருக்கும்.

பார்தி ஆக்சா லைஃப் சைல்டு திட்டம்

பார்தி ஆக்சா லைஃப் சைல்டு திட்டம்

பார்தி ஆக்சா லைஃப் சைல்டு திட்டம் (Bharti AXA Life child Avantage Plan) இரு வகையில் முதலீடு செய்து கொள்ளலாம். ரெகுலர் பே திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரை முதலீடு இணைந்து கொள்ளலாம். இதே லிமிடெட் பே என்ற ஆப்சனில் 18 வயது முதல் 55 வயது வரை இணைந்து கொள்ளலாம். இதில் ரெகுலர் பே திட்டத்தில் முதிர்வு காலம் 71 வயதாகும். இதே லிமிடெட் பே என்ற திட்டத்தில் 76 வயதாகும். இதில் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

எல்ஐசி – நியூ சில்லரன்ஸ் மனி பேக்

எல்ஐசி – நியூ சில்லரன்ஸ் மனி பேக்

இந்த திட்டத்தில் குழந்தை பிறந்தது முதல் 12 வயது வரை இணைந்து கொள்ளலாம். இதன் முதிர்வு காலம் 25 வயதாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வருட பிரீமியம் 24,000 ரூபாயாகும். இதில் முதிர்வு தொகையானது குறைந்தபட்சம் முதிர்வு தொகை 1 லட்சம் ரூபாய்கும். அதிகபட்சம் என்பது இங்கு இல்லை.

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ் பிளான்

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ் பிளான்

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ் பிளானில் 0 முதல் 13 வயது வரையிலும், 21 வயது முதல் 50 வரையிலும் இரு திட்டங்களில் இணைந்து கொள்ளலாம். இதன் முதிர்வு காலம் 70 வருடம். இதில் குறைந்தபட்சம் வருட பிரீமியம் 6000 ரூபாயாகும். இந்த திட்டத்தில் மினிமம் 1 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 1 கோடி வரையிலும் முதிர்வு தொகையாக கிடைக்கும். இது உங்களது பிரீமிய தொகையினை பொறுத்து இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best investment plans for children’s for India

Investments plans.. Best investment plans for children’s for India
Story first published: Sunday, November 15, 2020, 19:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X