குழந்தைகளுக்கான முதலீடு என்பது பாதுகாப்பான நிதி சார்ந்த எதிர்காலத்தினை உருவாக்க உதவும் சேமிப்பு ஆகும்.
இது உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற நிதி தேவைகளை பூர்த்தி செய்ய பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் குழந்தைகளுக்கான எதிர்கால செலவுகளை செய்ய போதுமான நிதிகளை சேகரிக்கும் விதமாக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் எதில் முதலீடு செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது குழந்தைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களாகும்.
அவிவா யங் ஸ்காலர் அட்வான்டேஜ் பிளான்
அந்தவகையில் நாம் இன்று சில இன்சூரன்ஸ் திட்டங்களை பற்றி பார்க்கவிருக்கின்றோம். முதலில் நாம் பார்க்கவிருப்பது அவிவா யங் ஸ்காலர் அட்வான்டேஜ் பிளான் (Aviva young scholar advantage plan) இந்த திட்டத்தில் நுழைவு வயது 21 - 45 வயதாகும். முதிர்வு வயது 60 வயதாகும். குறைந்தபட்ச பிரீமியம் 50,000 ரூபாயாகும். உங்கள் வருட பிரீமியத்தில் 10 மடங்கு முதிர்வு தொகையாக கிடைக்கும்.
பஜாஜ் அலையன்ஸ் யங் அஷ்யூர்
பஜாஜ் அலையன்ஸ் யங் அஷ்யூர் (Bajaj Allianz young assure) திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்திலும் முதிர்வு காலம் 60 வயதாகும். இதில் மினிமம் வருட பிரீமியம் என்பது குறிப்பிடப்படவில்லை. உங்களது வருட பிரீமியத்தில் 10 மடங்கு முதிர்வு தொகையாக கிடைக்கும்.
ஹெச்டிஎஃப்சி எஸ்எல் யங் ஸ்டார் சூப்பர் பிரீமியம்
ஹெச்டிஎஃப்சி எஸ்எல் யங் ஸ்டார் சூப்பர் பிரீமியம் (HDFC SL youngstar super premium) திட்டத்தின் நுழைவு வயது 18 - 65 வயதாகும். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 75 வயதாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஆண்டு பிரீமியம் 15,000 ரூபாயாகும். க்ளைம் விகிதம் உங்களது ஆண்டு பிரீமியத்தில் 10 மடங்காகும்.
பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஸ்டார் பிளஸ்
பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஸ்டார் பிளஸ் (Birla sun life insurance vision star plus) திட்டத்தில் நுழைவு வயது 15 - 55 வயது வரையாகும். இந்த திட்டத்தில் முதிர்வு வயது 75 வயதாகும். இந்த திட்டத்திலும் குறைந்தபட்ச பிரீமியம் என்பது இல்லை. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications