கொரோனாவின் தாக்கத்தினால் நாடே சீர்குலைந்து வரும் இந்த நிலையில், அரசு பல சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பினை செய்து வருகிறது.
குறிப்பாக சொல்லப்போனால் சிறு சேமிப்பு திட்டங்கள், ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி என அனைத்துக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதே வங்கிகளில் டெபாசிட் செய்து வைக்கலாம் என நினைத்தால், சில வங்கிகளும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன. அண்மையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிகளுக்கு வட்டியை 6% ஆக குறைத்துள்ளது.
இதில் முதலீடு செய்யலாம்
சரி இந்த நேரத்தில் அதிலும் அதிக வட்டியுடன் பாதுகாப்பான முதலீடுகளை செய்யலாம் என்றால் எதில் செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம். கேரளா போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு நிதிக் கழகம் (Kerala Transport and Development Finance Corporation) 8 சதவீத வட்டியினை வழங்கி வருகிறது, இதன் மூலம் 10 சதவீதம் லாபம் கிடைக்கிறது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. மற்ற விவரங்களுக்கு http://ktdfc.kerala.gov.in/deposites/interest-rates என்ற இணையதளத்தில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வட்டி விகிதம் எவ்வளவு
வருடம் வட்டிவிகிதம் முதிர்வு தொகை(ரூ.10,000) லாபம் வருடத்துக்கு (சுமார்)
1 வருடம் 8.00% 10,830 8.30%
2 வருடம் 8.00% 11,729 8.64%
3 வருடம் 8.00% 12,702 9.01%
4 வருடம் 7.75% 13,621 9.05%
5 வருடம் 7.75% 14,715 9.43%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு
வருடம் வட்டிவிகிதம் முதிர்வு தொகை(ரூ.10,000) லாபம் வருடத்துக்கு (சுமார்)
1 வருடம் 8.25% 10,857 8.57%
2 வருடம் 8.25% 11,787 8.94%
3 வருடம் 8.25% 12,797 9.32%
4 வருடம் 8.00% 13,757 9.39%
5 வருடம் 8.00% 14,898 9.80%
நிலையான வைப்பு தொகை
இந்த வைப்பு தொகையானது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவை கேரள அரசால் ரூ.4,500 கோடி ரூபாய் வரையில் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. மேலும் இதுவரையில் எந்த நிறுவனங்களும், வணிக வங்கிகளும் தற்போது இவ்வளவு வட்டியை கொடுப்பதில்லை. ஆக இது சிறந்த வட்டி விகிதத்தினையும் கொடுத்து வருகின்றது. ஆக இது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications