Mutual funds: சிறந்த செக்டோரல் மற்றும் தீமெட்டிக் பண்டுகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய 5 பண்டுகள்!

சந்தையானது ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் செக்டோரல் மற்றும் தீமெட்டிக் பண்டுகள் சிறந்த ஒரு ஆப்சனாக இருக்கலாம். இந்த வகையான பண்டுகள் பல நிறுவனங்களை ஒருஙகிணைக்கும் ஒரே துறை சார்ந்த பண்டுகள் அல்லது ஓரே இலக்கினை கொண்ட பங்குகளாக இருக்கலாம்.

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் பண்ட்ஸ் இன் இந்தியாவின் (AMFI) சமீபத்திய அறிக்கையின் படி, மற்ற ஈக்விட்டி குடோத் பண்டுகளை காட்டிலும் இந்த செக்டோரல் மற்றும் தீமெட்டிக் பண்டுகளில் முதலீடுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நல்ல வருமானம்

நல்ல வருமானம்

செக்டோரல் பண்டுகளில் நிகர மதிப்பு 3855.90 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஜனவரி 2023ல் கண்ட முதலீடுகளை விட சுமார் 327% அதிகமாகும். 1 வருடத்திற்கும் மேலாக செக்டோரல் பண்டுல்கள் நல்ல வருமானத்தினை கொடுத்துக் கொண்டுள்ளன.

ஆனால் மற்ற துறைகள் 1 - 2% குறைவான வருவாயினையே கொடுத்துள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 5 செக்டோரல் / தீமெட்டிக் பண்டுகளாகும். கடந்த 5 ஆண்டுகளாக 20% வருமானம் கொடுத்து கொண்டுள்ள பண்டுகளாகும். இந்த தரவானது AMFI இணையதளத்தில் மார்ச் 10, 2023 நிலவரப்படி எடுக்கப்பட்ட ஒன்று.

டாடா டிஜிட்டல் இந்தியா பண்ட்

டாடா டிஜிட்டல் இந்தியா பண்ட்

டாடா டிஜிட்டல் இந்தியா பண்ட் டேரக்ட் திட்டம், கடந்த 5 வருடங்களில் வருடாந்திர வருவாயாக 22.85% கொடுத்துள்ளது. இதே ரெகுலர் திட்டம் 20.82% வருமானத்தையும் கொடுத்துள்ளது. இந்த திட்டம் நிஃப்டி ஐடி வருவாய் குறியீட்டினைக் கண்கானித்து வருகின்றது. இந்த திட்டத்தில் எஸ்ஐபி மூலம் குறைந்தபட்சம் 150 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்ய முடியும். இதே குறைந்தபட்ச முதலீடு 5000 ரூபாய். குறைந்தபட்ச கூடுதல் முதலீடு 1000 ரூபாயாகும்.

ஐசிஐசிஐ புருடன்சியல் டெக்னாலஜி பண்ட்

ஐசிஐசிஐ புருடன்சியல் டெக்னாலஜி பண்ட்

டேரக்ட் பண்ட் திட்டமான ஐசிஐசிஐ புருடன்சியல் டெக்னாலஜி பண்ட் திட்டமானது, கடந்த ஆண்டுகளில் வருடாந்திர வருவாயாக 22.50% வருமானம் கொடுத்துள்ளது. இதன் ரெகுலர் திட்டமானது 21.335 வருமானத்தையும் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் எஸ் & பி டெக் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸினை கண்கானிக்கிறது.

இந்த திட்டத்திலும் எஸ்ஐபி மூலம் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்ய முடியும். இதே குறைந்தபட்ச முதலீடு 5000 ரூபாய். குறைந்தபட்ச கூடுதல் முதலீடு 1000 ரூபாயாகும்.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா பண்ட்

ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா பண்ட்

டேரக்ட் பண்ட் திட்டமான ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா பண்டில் ஆண்டுக்கு கடந்த 5 ஆண்டுகளில் வருடாந்திர வருவாயினை 21.76% ஆக கிடைத்துள்ளது. இதே ரெகுலர் திட்டத்தில் 20.44% வருமானம் கிடைத்துள்ளது. இந்த பண்டானது ஃபண்ட் எஸ் & பி டெக் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸினை கண்கானிக்கிறது.

இந்த திட்டத்தில் எஸ்ஐபி மூலம் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்ய முடியும். இதே குறைந்தபட்ச முதலீடு 5000 ரூபாய். குறைந்தபட்ச கூடுதல் முதலீடு 1000 ரூபாய் செய்து கொள்ளலாம்.

குவாண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பண்ட்

குவாண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பண்ட்

டேரக்ட் பண்ட் திட்டமான குவாண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பண்ட் கடந்த 5 ஆண்டுகளில் வருடாந்திர வருவாயினை 21.10% ஆக கொடுத்துள்ளது. இதே ரெகுலர் திட்டத்தில் 19.77% வருமானம் கிடைத்துள்ளது. இந்த திட்டமானது நிஃப்டி இன்ப்ராஸ்ட்ரக்சர் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸினை கண்கானிக்கிறது.

எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்சுனிடி ஃபண்ட்

எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்சுனிடி ஃபண்ட்

டேரக்ட் பண்ட் திட்டமான எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்சுனிடி ஃபண்ட் வருடத்திற்கு 21.68% கடந்த 5 ஆண்டுகளில் 21.68% வருடாந்திர வருவாயினை கொடுத்துள்ளது. இதே ரெகுலர் திட்டத்தில் 20.31% வருமானம் கிடைத்துள்ளது. இந்த திட்டம் எஸ் & பி டெக் மொத்த ரிட்டர்ன் இன்டெக்னினை கண்கானிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+