நீண்ட கால முதலீட்டுக்கு இது நல்ல ஆப்சன் தான்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்டகால நோக்கில் அதிக வருமானம் கொடுத்து கொண்டு இருக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் சிறந்த முதலீடுகளாக இருந்து வருகின்றன.

 

இது மிக அதிகம் என்று சொல்ல முடியாவிட்டாலும், தற்போது கொரோனா நெருக்கடியினால் பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கம் கண்டு வருகின்றன. உதாரணத்துக்கு சென்செக்ஸ் உச்ச மட்டத்திலிருந்து 20 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஸ்மால் கேப் ஃபண்டுகள் சிறந்த முதலீடாக இருந்து வருகிறது.

நீண்ட கால முதலீட்டுக்கு இது நல்ல ஆப்சன் தான்.. !

இந்த தற்போது மூன்று சிறந்த ஸ்மால் கேப் ஃபண்டுகளை பார்க்க போகிறோம்.

ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட்

முதலாவதாக நாம் பார்க்க போவது ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட். இந்த ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்டுக்கு 5 நட்சத்திர மதிப்பீடுகளில் 4 நட்சத்திர மதிப்பீடு உள்ளது. கடந்த 1 வருடத்தில் இந்த ஃபண்ட் மோசமான பதிவினை செயல்பட்டது. இது 1.37 சதவீத எதிர்மறையான வருவாயினை கொடுத்துள்ளது. இது கொரோனாவின் காரணமாக பங்கு வீழ்ச்சியினால் ஏற்பட்டதாகும். இருப்பினும் 5 ஆண்டு கால வருமானத்தில் வருடத்திற்கு 8.25 சதவீத வருமானத்தினை கொடுத்துள்ளது.

இந்த ஃபண்டில் கேலக்ஸி சர்பாகண்ட்ஸ், சிட்டி யூனியன் வங்கி, ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், ஜேகே சிமெண்ட் போன்றவை இதில் அடங்கும். இதில் குறைந்தபட்ச முதலீடு 5000 ரூபாயாகும்.

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்டு

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்டுக்கும் கிரிசில் நிறுவனம் 4 நட்சத்திர மதிப்பீட்டை கொடுத்துள்ளது. இதில் குறைந்தபட்ச முதலீடு என்பது 500 ரூபாயாகும். எனினும் இதில் ஆரம்ப முதலீடு என்பது 5,000 ரூபாயாகும்.

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் மூன்று ஆண்டுகளில் 2.81 சதவீத லாபமும், இதே 5 வருடத்தில் 9.99 சதவீத வருமானமும் கொடுத்துள்ளது.

இந்த ஃபண்டில் டிக்ஸான் டெக்னாலஜிஸ், ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் லிமிடெட், எல்கி எக்கியூப்மென்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கு வைத்துள்ளன.

 

நிப்பான் ஸ்மால் கேப் ஃபண்ட்

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டிற்கும் மதிப்பீட்டு நிறுவனங்கள் 4 நட்சத்திர மதிப்பினை கொடுத்துள்ளது. இந்த ஸ்மால் கேப் ஃபண்டானது கடந்த ஐந்து ஆண்டுகளில் வருடத்திற்கு 7.77 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. இதே மூன்று வருடத்தில் 3.73 சதவீத வருமானம் கொடுத்துள்ளது.

இந்த ஸ்மால் கேப் ஃபண்டில், தீபக் நைட் ரைட்,நவின் ஃப்ளோரின் இண்டர்நேஷனல், டாடா நுகர்வோர், ஓரியண்ட் எலக்ட்ரிக் போன்ற பங்குகள் அடங்கும். இந்த நிதியில் 97 சதவீதம் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஸ்மால் கேப் ஃபண்டினை பொறுத்தவரையில் 1 வருடத்திற்கு முன்பு வெளியேறினால் 1 சதவீதம் வெளியேறும் கட்டணம் உள்ளது. 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த ஃபண்டினை தேர்தெடுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best small cap mutual funds for long term investments

Small cap mutual funds are select stocks for investment from the small cap category. Its suitable for long term investors.
Story first published: Monday, June 22, 2020, 21:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X