உங்கள் முதலீடு இருமடங்காக மாற எதில் முதலீடு செய்யலாம்.. எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும்?

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் அவசியத்தை பற்றி பலரும் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். முதலீடு என்பதை பற்றி இதுவரை யோசிக்காதவர்கள் கூட, தற்போது அதன் அவசியத்தினை உணர்ந்திருப்பர்.

கொரோனா எல்லாவற்றையும் மாற்றி விட்டது. மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி விட்டது. பணத்தின் மதிப்பினை மக்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பதும் நமது பணத்தினை, முதலீட்டினை எப்படி இருமடங்காக மாற்றுவது? அதற்காக எதில் முதலீடு செய்யலாம்? எது பாதுகாப்பானது? எது சிறந்தது? என பார்க்கலாம்.

முதலீட்டிற்கு சிறந்தது எது?

முதலீட்டிற்கு சிறந்தது எது?

பொதுவாக அதிக லாபம் கிடைத்தால் போதும் என நம்பி யாரோ சொன்னார்கள் என்பதற்காக முதலீடு செய்யும் மக்கள், பிற்காலத்தில் முதலீட்டினை இழக்கின்றனர். இப்படி எதுவும் தெரியாமல் மாட்டிக் கொண்டு விழிப்பதை விட, அரசின் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கருத்துகின்றனர். இன்று நாம் பார்க்கவிருப்பது உங்களது முதலீடுகளை இருமடங்காக மாற்ற அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள் சிறந்ததா? அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களா? வாருங்கள் பார்க்கலாம்.

வட்டி குறைப்பு வாபஸ்

வட்டி குறைப்பு வாபஸ்

சில தினங்களுக்கு முன்பு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த வட்டி குறைப்பானது 110 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த அறிவிப்பு அவசர அவசரமாக வாபஸ் பெறப்பட்டது. ஆக இதன் படி அரசின் இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் பழையபடி தொடரும் என அறிவிக்கப்பட்டது.

எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி?

எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி?

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு - 7.6% வட்டி விகிதமும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு - 7.1%மும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு - 7.6%மும், தேசிய சேமிப்பு பத்திரம் - 6.6% கிசான் விகாஸ் பத்திரம் - 6.6%மும் வட்டி விகிதம் உள்ளது. மேற்கண்ட இந்த சேமிப்பு திட்டங்கள் மூலம், முதலீடு செய்யப்படும் உங்கள் தொகையை எப்படி இரட்டிப்பாக்குவது என்பதற்காக Rule of 72-வை பயன்படுத்துவோம்.

Rule of 72 என்றால் என்ன?

Rule of 72 என்றால் என்ன?

அதெல்லாம் சரி அதென்ன Rule of 72? உங்கள் முதலீடு எத்தனை வருடத்தில் இரட்டிபாகும் என்பதை எளிதாக கணக்கிட விதி 72 போதும். இதற்காக நீங்கள் பெரிய கணக்கீடுகள் எதுவும் செய்யத்தேவையில்லை. உங்கள் முதலீட்டு திட்டத்தின் வட்டி விகிதத்தினை மட்டும் வைத்து, உங்கள் முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பதை கணக்கிட முடியும். உதாரணத்திற்கு உங்களது சேமிப்புக்கு 5% வட்டி விகிதம் கிடைக்கிறது எனில், 72/5 = 14.4 வருடங்களில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

எப்போது உங்களது முதலீடு இரட்டிப்பாலும்?

எப்போது உங்களது முதலீடு இரட்டிப்பாலும்?

உதாரணத்திற்கு பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு - 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, விதி 72ன் கீழ் 9.4 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும். இதே பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ( வட்டி விகிதம்7.1%) 10.14 வருடங்களிலும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், (வட்டி விகிதம் 7.6%) 9.4 வருடங்களிலும், தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் 10.9 வருடங்களிலும், கிசான் விகாஸ் பத்திரத்தில் 10.9 ஆண்டுகளிலும் இரட்டிப்பாகும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

தற்போதைய காலகட்டத்தில் நீண்டகால, குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக 6.6% வரை லாபம் கொடுக்கின்றனர். ஆக இந்த முதலீடுகள் 10.9 ஆண்டுகளில் உங்கள் முதலீடுகளை இரட்டிப்பாக்கலாம். இதே டைனமிக் பாண்ட் பண்டுகள் சராசரியாக 6.8% வருமானத்தினைக் கொடுக்கின்றன. இதன் படி 10.6 ஆண்டுகளில் இது உங்களது முதலீட்டினை இரட்டிப்பாக்கும்.

மக்களுக்கு ஏற்ற திட்டங்கள்

மக்களுக்கு ஏற்ற திட்டங்கள்

ஆக தற்போதைய சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு பதிலாக, சிறுசேமிப்பு திட்டங்கள் நல்ல லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் அரசின் இந்த சேமிப்பு திட்டங்களுக்கு வரி விகிதம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அப்படியே இருக்கும் என தெரியவில்லை. ஆக அதனை பொறுத்து உங்களது முதலீடுகள் இரட்டிப்பாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+