சமீபத்திய காலமாகவே தொடர்ந்து வட்டி விகிதம் என்பது அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதம், வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினையும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சமீபத்திய மாதங்களாகவே வங்கி வைப்பு நிதி என்பது கவர்ச்சிகரமான திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பஞ்சாப் & சிந்த் வங்கி 8.85% வரையில் வட்டி விகிதத்தினை கொடுத்து வருகின்றது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல விஷயம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் சீனியர் சிட்டிசன்கள்
இவ்வங்கியில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.85% வரையில் கிடைக்கிறது. இதில் PSB உத்கர்ஷ் 222 நாள் என்ற பிக்சட் டெபாசிட் திட்டம் மூலம் கிடைக்கிறது. இதில் மூத்த குடிமக்கள் மற்றும் பொது மக்களுக்கு முறையே 222 நாள் திட்டத்தில் 8.5% மற்றும் 8% எனும் அளவில் வட்டி விகிதமானது கிடைக்கிறது.
300 நாள் திட்டம்
இவ்வங்கி பல நிலையான பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றது. இதில் 300 நாள் திட்டத்தில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.35% வரையில் வட்டி விகிதமானது கிடைக்கிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 8% வரையில் கிடைக்கிறது. இதே சாதாரண பொது மக்களுக்கு 7.5% வரையில் கிடைக்கிறது.
601 நாள் திட்டம்
சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 601 நாள் திட்டத்தில் 7.85 சதவீதம் வரையிலும், இதே மூத்த குடிமக்களுக்கு 7.50%மும், சாதாரண பொது மக்களுக்கு 7% வட்டி விகிதமும் கிடைக்கிறது.
1051 நாள் திட்டம்
சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 1051 நாள் திட்டத்தில் 7.85% வரையில் வட்டி விகிதம் கிடைக்கிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 7.5% வரையில் கிடைக்கிறது. இதே பொது மக்களுக்கு 7% வட்டியும் கிடைக்கிறது.
இதே மற்ற பொதுத் துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது வட்டி அதிகம் என்பதால், இது சிறந்த முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ-யில் அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்தின் கீழ் 7.6% வட்டி விகிதமும், எஸ்பிஐ சர்வோட்டம் திட்டத்தின் கீழ் 15 லட்சத்துக்கு மேலாக டெபாசிட் திட்டத்திற்கு 7.9% வட்டியும் கொடுக்கப்படுகிறது.
மற்ற வங்கிகளில் என்ன நிலவரம்?
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 666 நாள் திட்டத்தில் 8.05 சதவீதம் வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும் கிடைக்கிறது.
இதே பாங்க் ஆப் பரோடாவில் 399 நாள் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications