முதல் சம்பளம், கை நிறைய பணம், உலகமே என் கையில் என்பது போன்ற நினைவு தான் 20-களில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மனநிலையும். கைநிறைய சம்பாதிக்க தொடங்கியவுடன், கனவு கண்ட கேட்ஜெட்கள், வீக்-எண்ட் பார்ட்டிகள், பிராண்டட் ஆடைகள் என வாழ்க்கை வண்ணமயமாக தெரியும். ஆனால் இந்த வண்ணமயமான கொண்டாட்டங்களுக்கு பின்னால் ஒரு நிழல் ஒளிந்திருக்கிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் நீங்கள் ஒரு கோடீஸ்வரராக உருவெடுக்க போகிறீர்களா அல்லது மாத கடைசியில் அடுத்த சம்பளத்திற்காக காத்திருக்கும் EMI கைதியாக மாறப்போகிறீர்களா என்பதை உங்கள் இன்றைய நிதி முடிவுகளே தீர்மானிக்கின்றன. பல இளம் புரொபஷனல்கள் தங்களை அறியாமலேயே செய்யும் சில விலை உயர்ந்த தவறுகள், அவர்களின் எதிர்கால நிதிச் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கி விடுகின்றன.

சம்பாதிக்கும் வயதில் சேமிக்க தவறினால், முதுமையில் உழைக்க வேண்டியிருக்கும். ஆக உங்கள் கோடீஸ்வர கனவை நிஜமாக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய அந்த 7 ஆபத்தான நிதி தவறுகள் என்னென்ன? அவற்றில் இருந்து தப்பிப்பது எப்படி? விரிவாக தெரிந்து கொள்வோம்.
வேலைக்கு செல்லத் தொடங்கும் போது ஆர்வத்தில் நினைத்ததை எல்லாம் செய்யும் நாம், எதிர்காலத்தில் அத்தியாவசியம் என்பதை கூட யோசித்து தான் செய்ய வேண்டியிருக்கிறது. இன்று சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கண்மூடித்தனமாக செலவு செய்து விட்டால், வயதான காலத்தில் ஆயுள் கைதியாகிவிட வேண்டும். ஆக இன்றே, இப்போதிலிருந்தே சரியாக திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள். பல இளைஞர்கள் ஆடம்பரத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும் செலவு செய்கிறார்கள். ஆனால் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட முதலீட்டுக்கும், சேமிப்புக்கும் கொடுப்பதில்லை.
தவிர்க்க வேண்டிய 7 முக்கிய நிதி தவறுகள்:
1. ஆடம்பர செலவுகள்; சம்பாதிக்க ஆரம்பித்த உடனே பலவும் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நினைக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தை சேமிப்பதிலும், செலவுகளை குறைத்து முதலீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் சம்பளம் வாங்கிய உடனே ஆடம்பர செலவுகள் செய்தால், ஒரு கட்டத்தில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இது உங்களுடைய நீண்ட கால நிதி நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
2. முதலீட்டை தள்ளிப்போடுதல்: பலரும் செய்யும் தவறுகள் இது. வேலைக்கு செல்லும் ஆரம்பத்தில் பலருக்கும் பெரிய அளவிலான தேவைகள் இருக்காது. ஆக சம்பளத்தின் பெரும்பகுதியை மிச்சப்படுத்த முடியும். சரியாக திட்டமிட்டால் அதை எதிர்காலத்தில் மிகப்பெரிய கார்ப்பஸ் ஆக மாற்ற முடியும். அதோடு எஸ் ஐ பி போன்ற முதலீடுகள் செய்யும் போது கூட்டு வட்டிக்கான கால அவகாசமும் அதிகம் கிடைக்கும். இது பிற்காலத்தில் மிகப்பெரிய கார்ப்பஸ் தொகையை பெற உதவும். ஆக எவ்வளவு விரைவில் முதலீட்டை தொடங்குகிறீர்களோ, அவ்வளவு விரைவில் ஓய்வு பெற முடியும். வருமானமும் அதிகரிக்கும்.
3. தவறான கடன் வேண்டாம்: இன்றைய காலத்தில் சம்பாதிப்பை காட்டிலும், கடன் வாங்குவது என்பது மிக எளிதாகி விட்டது. கடன் கிடைக்கிறது என கன்னாபின்னாவென்று வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தும் போது பல சவால்களை எதிர்கொள்ளலாம். குறிப்பாக கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக முறையான திட்டமிடல் இல்லாமல் கடன் வாங்குவது தவறு. இது ஒரு கட்டத்தில் உங்களை மிகப்பெரிய கடன் வலைக்குள் தள்ளிவிடலாம்.
4. அவசர கால நிதி குறித்த அலட்சியம்: இன்றைய கால இளம் தலைமுறையினர் பெரும்பாலும் அவசர கால நிதி என்ற ஒன்றை வைத்திருப்பதே இல்லை. அதை பிரச்சனை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனம் இருக்கிறது. ஆனால் அது தவறான ஒன்று. கட்டாயம் 6 மாதம் முதல் 12 மாதங்கள் வரையிலான செலவு பணத்தை அவசர கால நிதியை எளிதில் அனுகும் விதமாக வைத்திருப்பது நல்லது. இது இல்லாதபட்சத்தில் வேலை இழப்பு, திடீர் மருத்துவ செலவுகள் ஏற்பட்டால், உங்கள் குடும்பமும் உங்களுடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
5. நிதி திட்டமிடல் இல்லாமை; நிதி திட்டமிடல் என்பது ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் பலரும் அதை பற்றி நினைப்பது கூட இல்லை. ஆக நிதி சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சம்பளம் வந்தவுடன், அதை சரியாக திட்டமிட்டு பட்ஜெட் போட வேண்டும். நீண்ட கால திட்டமிடல் இல்லை என்றால், நிச்சயம் எதிர்காலத்தில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். உங்கள் பணம் எங்கே போகிறது எனத் தெரியாமலேயே செலவு செய்து கொண்டிருப்பீர்கள்.
6. இன்சூரன்ஸ்-ஐ தவிர்த்தல்:வயது அதிகரிக்க பொறுப்புகளும் கூடும். அதோடு உடல் நலத்திலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆக சம்பாதித்து முதலீடு செய்வது மட்டுமல்ல, இன்சூரன்ஸும் அவசியம். அப்போது தான் எதிர்பாரா மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும். மேலும் ஒவ்வொருவரும் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதும் அவசியம். இது ஆரம்ப காலத்தில் இருந்தே எடுத்தால் பிரீமியமும் குறைவாக இருக்கும்.
7. செலவுகளை கண்காணிக்க தவறுதல்;உங்கள் பணம் எங்கே செல்கிறது என்பதை கண்காணித்தல் மட்டுமே, நீங்கள் சரியான செலவுகளைத் தான் செய்கிறீர்களா? எதை தவிர்க்கலாம், எதை வாங்கலாம் என திட்டமிட முடியும். செலவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். முதலீட்டுக்கும், சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியும். குறிப்பாக தேவையில்லாத செலவுகளை குறைக்க முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications

