வீட்டுக் கடன் வாங்க திட்டமா.. பாங்க் ஆப் பரோடா கொடுத்த ஆஃபர்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா, வீட்டுக் கடனுக்கானவட்டி விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.

 

தற்போது வருடத்திற்கு வட்டி விகிதம் 8.25%ல் இருந்து ஆரம்பமாகிறது. இந்த வட்டி குறைப்பானது நவம்பர் 14, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த குறைந்த வட்டி விகிதமானது குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதம் டிசம்பர் 31, 2022 வரையில் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

கடந்த சில மாதங்களாகவே வட்டி விகிதத்தினை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இந்த காலகட்டத்தில் பாங்க் ஆப் பரோடா வட்டி விகிதத்தினை 2 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு விகிதமானது பேலன்ஸ் டிரான்ஸ்பர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் ஸ்கோரை பொறுத்து மாறலாம்

கிரெடிட் ஸ்கோரை பொறுத்து மாறலாம்

இதன் மூலம் பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதம் பொருந்தும் என்றாலும், அவரவர் கிரெடிட் புரபைலை பொருத்து மாறுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த கடினமான காலகட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கடன் வாங்க காரணமாக வாய்ப்பாக அமையலாம்.

 செயல்பாட்டுக் கட்டணம் இல்லை
 

செயல்பாட்டுக் கட்டணம் இல்லை

இது வீட்டுக் கடன் வாடிக்கையாளார்களை ஊக்குவிக்கலாம். இந்த சிறப்பு சலுகைக்கு செயல்பாட்டு கட்டணமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை வாங்க குறைந்தபட்ச ஆவணங்கள் இருந்தாலே போதும். இதற்கான காலகட்டம் 360 மாதங்கள் ஆகலாம். முன் கூட்டியே இந்த கடனை திரும்ப செலுத்த எந்த கட்டணமும் இல்லை என அறிவித்துள்ளது.

 எவ்வளவு வட்டி?

எவ்வளவு வட்டி?

இந்த சேவைக்கு டோர் டூ டோர் சேவையானது கிடைக்கும். பணியாளர்களுக்கு அல்லாத உறுப்பினர்களுக்கான பாங்க் ஆப் பரோடா வீட்டுக் கடனுக்கான பயனுள்ள வட்டி விகிதம் சம்பளதாரர்களுக்கு 8.25% முதல் 9.85% வரையில் கிடைக்கலாம். இதே சம்பளம் பெறாததவர்களுக்கு 8.30% முதல் 9.95% வரையில் கொடுக்கப்படலாம்.

 பணியாளர்கள்

பணியாளர்கள்

தற்போது பாங்க் ஆப்பரோடா பணியாளர்களுக்கான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.50% ஆகும். சிபில் ஸ்கோர் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது. சிபில் ஸ்கோரினை கடனுக்கான வட்டி விகிதத்தினை தீர்மானிக்கிறது. இது 701 அல்லது அதற்கு மேலாக இருந்தால் அது போதுமானதாக கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BoB cuts home loan interest rates to 8.25% for a particular period

Bank of Baroda has cut its home loan interest rate by 25 basis points.
Story first published: Wednesday, November 23, 2022, 20:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X