நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, மற்ற இரு பொதுத்துறை வங்கிகளான தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு மூன்றாவது பெரிய வங்கியாக கடந்த ஆண்டில் உருவெடுத்தது.
இவ்வங்கிகளின் இணைப்பினால் தேனா வங்கி, விஜயா வங்கிகளின் கிளையும் பேங்க் ஆஃப் பரோடாவாக செயல்பட்டது.
இந்த நிலையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளின் 3,898 கிளைகளையும் ஒருங்கிணைத்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மூன்று வங்கிகளும் ஏப்ரல் 1, முதல் இந்த மூன்று வங்கிகளும் இணைக்கப்பட்டன. தேனா வங்கியின் 1,770 கிளைகளை ஒருங்கிணைப்பதை டிசம்பர் 2020ல் நிறைவு செய்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
மூன்று வங்கிகள் இணைப்பு
கடந்த செப்டம்பர் 2020ல் விஜயா வங்கியின் 2,128 கிளைகளையும் ஒருங்கிணைத்ததாக இவ்வங்கி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக தனது இணைப்பு நடவடிக்கையினை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாங்கள் இது குறித்து மிக மகிழ்ச்சியடைகிறோம். அதிலும் கொரோனா சூழலிலும் நாங்கள் வெற்றிகரமாக இணைத்துள்ளோம்.
அனைத்து சேவைகள்
ஆக எங்களது மதிப்பு மிக்க வாடிக்கையாளரகளை நாங்கள் மீண்டும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். மேலும் பேங்க் ஆப் பரோடாவின் முழு தயாரிப்புகளையும், டிஜிட்டல் தீர்வுகளையும் முழுவதையும் முற்றிலும் பெறுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சீவ் சாதா தெரிவித்துள்ளார்.
மொத்த கிளைகள்
இந்த இணைப்பு மூல 5 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் இடம்பெயர்ந்தன. கிளைகளை தவிர அனைத்து ஏடிஎம்கள், பிஓஎஸ் இயந்திரங்கள் என அனைத்தும் வெற்றிகரமாக இடம்பெயர்ந்துள்ளன. இந்த நிலையில் தற்போது பேங்க் ஆஃப் பரோடாவில் மொத்தம் 8,248 உள்நாட்டு கிளைகள் உள்ளன. 10,318 ஏடிஎம்கள் உள்ளன.
எல்லா சேவைகளும் கிடைக்கும்
ஆக இனி பேங்க் ஆஃப் பரோடாவில் அதன் முழு சேவைகளையும், முழுமையான அணுகலையும் வழங்கும் என வங்கி தெரிவித்துள்ளது. இப்போது அனைத்து வாடிக்கையாளர்களும் டிஜிட்டல் சேவைகள் அனைத்தும் பெற முடியும். முந்தைய வங்கிகளால் வழங்கப்பட்ட டெபிட் கார்டுகள், காலாவதி தேதி வரை தொடர்ந்து செயல்படும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications