சென்னை: சொந்தமாக தொழில் செய்யும் பலர் சந்திக்கக்கூடிய முதன்மையான பிரச்சனையில் ஒன்று தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அல்லது தாங்கள் வழங்கும் சேவையை எவ்வாறு மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பதுதான். சொந்த தொழில் முனைவோர் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை செய்யும் யுக்தி ஆகியவற்றை தெரிந்து கொண்டாலே அவர்கள் செய்யும் தொழிலில் அபார வளர்ச்சி அடைய முடியும். அத்தகைய மார்க்கெட்டிங் டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
எந்த ஒரு நிறுவனத்தின் நீண்ட கால வெற்றிக்கும் மார்க்கெட்டிங் ஒரு முக்கிய அங்கமாகும். இன்றைய போட்டி நிறைந்த உலகில் எந்த ஒரு தொழிலுக்கும் நல்ல மார்க்கெட்டிங் யுக்திகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. அதற்கு உதவும் வகையில் உங்களது வணிகத்தையோ அல்லது சேவையையோ வளர்க்க உதவும் 5 எளிய டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

1) முதலாவதாக நீங்கள் யாருக்கான நிறுவனத்தை நடத்துகிறீர்கள், என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் தயாரிக்கும் பொருள் அல்லது நீங்கள் வழங்கும் சேவை யாருக்கு உதவும் வகையில் உள்ளது என்பதை தெரிந்து செயல்பட வேண்டும். வாடிக்கையாளரின் தேவை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் தான் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மாறாக தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர் வாங்க வேண்டும் என்று கருதுவது தவறு. சான்றாக இம்போர்ட், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்பவர்களுக்கான சாஃப்ட்வேரை ஒரு நிறுவனம் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது இந்த சாப்ட்வேரின் தேவை லாஜிஸ்டிக் மற்றும் இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்யக்கூடிய நபர்களுக்கு மட்டுமே தேவையான ஒன்றாகும். இதனை ஒரு மளிகை கடை வைத்திருப்பவருக்கு கொடுக்க முடியாது. எனவே உங்களின் சேவை அல்லது பொருள் யாரை சென்று அடைய வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.
2) சமூக வலைத்தளங்களை நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துங்கள்.பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவை குறித்த கன்டென்டுகளை அப்லோட் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் பயன்படுத்தும் அனைத்து மக்களுக்கும், உங்களது தயாரிப்புகள் சென்றடையும். இதன் மூலம் உங்களுக்கு வாடிக்கையாளர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் நாம் அனைவரும் மார்க்கெட்டிங் செய்யும் பலரைப் பார்க்க முடிகிறது.
3) நல்ல தள்ளுபடிகளை வாடிக்கையாளருக்கு வழங்குங்கள். நாம் அனைவரும் தள்ளுபடி என்று கூறிவிட்டால் போதும் அடித்து பிடித்துக் கொண்டு பொருட்களை வாங்க சென்று விடுவோம். ஆடி மாதத்தில் துணி கடைகளில் மற்ற மாதங்களை ஒப்பிடுகையில் அதிக அளவு துணி விற்பனை செய்யப்படும். இதற்கு காரணமே அவர்கள் ஆடி மாதங்களில் கொடுக்கும் தள்ளுபடி தான். இதனையே நீங்களும் உங்கள் தொழிலுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும்போது நீங்கள் புது வாடிக்கையாளரை ஈர்க்க முடியும். மேலும், உங்களது பழைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலும் இருக்கும்.
4) சொந்த தொழில் செய்பவர்கள் தங்களுக்கு என்று ஒரு சிஸ்டமேட்டிக் வழியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. நீங்கள் தயாரிக்கும் பொருட்களை அதிக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு உங்கள் நிறுவனத்தில் சேல்ஸ் டீம், சோசியல் மீடியா டீம், சப்போர்ட் டீம் போன்ற சிஸ்டமேட்டிக் வழியை பயன்படுத்தும் போது உங்களது சேவை அல்லது நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் மக்களை சென்றடைய எளிதாக இருக்கும். மேலும் நீங்கள் ஒவ்வொரு டீமிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
5) உங்களுடைய மார்க்கெட்டிங் பல பொருட்களை வைத்து இருக்கக் கூடாது. அது குழப்பத்திற்கு வழிவகுக்கும். மேலும், மக்களிடம் அனைத்து பொருட்களையும் வாங்க வைப்பது கடினமானதாக இருக்கலாம். எனவே உங்களுடைய மார்க்கெட்டிங் ஒரு பர்டிகுலர் பொருளை வைத்து தான் இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களுடைய வாடிக்கையாளரை நீங்கள் கவர முடியும். அதன்பின் உங்களது மற்ற தயாரிப்புகளை நீங்கள் அவர்களிடம் எடுத்துக் கூறலாம். சான்றாக நீங்கள் டாமினோஸ் பீட்சாவை எடுத்துக் கொள்ளலாம் டாமினோஸ் என்றாலே நினைவிற்கு வருவது பீட்சா தான். ஆனால் அவர்கள் மற்ற உணவுகளான பர்கர், பிரெஞ்ச் ப்ரைஸ், குளிர்பானங்கள் போன்றவற்றையும் சேர்த்து விற்பனை செய்கிறார்கள்.
இதுபோன்ற சில மார்க்கெட்டிங் யுக்திகளை உங்களது தொழிலில் கொண்டு வரும்போது நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை அதிகரிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications