புதுசா கார் வாங்குறீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க! கார் வாங்குபவர்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்!

நாம் விருப்பப்படும் காரை வாங்கி.. அதை ஷோரூமில் இருந்து வெளியில் எடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சில கார் டீலர்கள், கார் கனவை நினைவாக்க லோன் வசதியும் வழங்குகின்றனர். ஆனால் லோன் வாங்கி கார் வாங்கினாலும் அதன் பிறகு என்னென்ன செலவுகள் இருக்கும்? என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் கார் வாங்குவதுடன் உங்களுடைய செலவு நின்றுவிடாது. அதன் பிறகும் சில விஷயங்களுக்கு செலவு செய்ய வேண்டி வரும். இதையெல்லாம் கருத்தில் கொண்டே புதிய காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக டவுன் பேமெண்ட், மாதாந்திர ஈஎம்ஐ, பெட்ரோல், டீசல், இன்சூரன்ஸ், சர்வீஸ் என அடுத்தடுத்த செலவுகள் தொடர்ந்து இருக்கும். இதற்கெல்லாம் சரியான திட்டமிடல் அவசியம். இதை செய்வதில் சிறிய தவறு செய்தாலும் சரி.. பராமரிப்புச் செலவு அதிகரித்து உங்களை தீராத கடன் சுமையில் சிக்க வைத்து விடும். இந்தப் பதிவில் புதிதாக கார் வாங்கிய உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

புதுசா கார் வாங்குறீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க! கார் வாங்குபவர்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்!

பட்ஜெட்டை தாண்டி விலை அதிகமான காரைத் தேர்ந்தெடுப்பது: கார் ஷோரூமுக்கு செல்லும் வரை இந்த காரை வாங்க வேண்டும்.. அந்த காரை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஷோரூமுக்கு சென்ற பிறகு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பிற கார்களை பார்த்தால் மனதில் ஒருவித ஆசை தோன்றும். ஆனால் இதையெல்லாம் வைத்து முடிவெடுக்கக்கூடாது. உங்களுடைய பட்ஜெட்டுக்கு அதிகமான விலை கொடுத்து காரை வாங்குவது சேமிப்பை கரைத்து விடும். அதோடு உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டையும் பாதிக்கும்.

Also Read

கார் வாங்கும் போது உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது. உங்களுடைய தேவை என்ன? என்பதை பொறுத்தே முடிவு எடுக்க வேண்டும். அதேபோல ஒரு காரை தேர்ந்தெடுக்கும் போது அதற்கான ஈஎம்ஐ எவ்வளவு?, ஓட்டும்போது என்னென்ன செலவுகள் ஏற்படும்?, பெட்ரோல், டீசல் போடுவதற்கு ஏற்ப மைலேஜ் கிடைக்குமா?, பிற கடன்களை செலுத்தி விட்டு ஈஎம்ஐ செலுத்தும் போது பிரச்சனை ஏதும் ஏற்படுமா? என்பதை எல்லாம் கவனித்தே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசைக்காக முடிவெடுத்து விட்டால் பிற்காலத்தில் நீங்கள் கடன் பட வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இன்சூரன்ஸ் ரெனிவல் செய்வதை தவிர்ப்பது: புது கார் வாங்கும் போது இன்சூரன்ஸ் வழங்கப்படும். ஆனால் மறு ஆண்டு வரும் போது அதை கண்டிப்பாக ரினிவல் செய்ய வேண்டும். அதேபோல எதிர்காலச் செலவுகள் என்னென்ன ஏற்படும் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ஒரு இன்சூரன்ஸ்-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பணம் சேமிக்க வேண்டும் என்பதற்காக இன்சூரன்ஸ் கவரேஜை குறைப்பது ஆபத்தில் முடியலாம்.

பெட்ரோல் டீசல், செலவையும் கருத்தில் கொள்ளுங்கள்: கார் ஈஎம்ஐ கட்டிக்கொண்டே காரை பயன்படுத்தத் தொடங்கி விடுவீர்கள். எனவே ஒரு காரைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் போடும் பெட்ரோல், டீசலுக்கு ஏற்ப மைலேஜ் தருகிறதா? என்பதையும் பார்க்க வேண்டும். சில லக்ஸரி கார்கள் குறைந்த மைலேஜே கொடுக்கும்.

எனவே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காக ஒரு காரைத் தேர்ந்தெடுக்காமல் உங்களுடைய பிற்காலச் செலவுகளுக்கு ஏற்ப திட்டமிட வேண்டும். ஏனெனில் போர் பதற்றங்கள் அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படும் சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்.

சர்வீஸ் செய்யாமல் இருப்பது: கார் வாங்கிய பிறகு சேமிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் தேதியில் சர்வீஸ் செய்யாமல் தள்ளி போடக்கூடாது. இதனால் நீங்கள் புதிதாக வாங்கிய காரின் இன்ஜின் பாதிக்கப்படும். இன்ஜின் பாதித்தால் மைலேஜ் குறைவதுடன் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு.. அதற்கு சர்வீஸ் சார்ஜை தாண்டி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே கார் வாங்கும் போது அவர்கள் சொல்லும் கால இடைவெளிக்கு ஏற்ப முறைப்படி சர்வீஸ் செய்ய வேண்டும்.

மறைமுக செலவுகளை கவனிக்காமல் விடுவது: கார் வாங்கியவுடன் ஈஎம்ஐ செலுத்திக் கொண்டிருக்கும் போது பிற விஷயங்களுக்கும் நீங்கள் செலவு செய்தாக வேண்டும். உதாரணமாக எங்காவது காரை எடுத்துச் சென்றால் அதற்கான பார்க்கிங் கட்டணம். அவ்வப்போது காரை வாஷ் செய்வதற்கான செலவுகள், தேவைப்படும் ஆக்சஸரீஸ் வாங்குவதற்கான செலவுகள், பிரச்சினை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கான செலவுகள் என சின்ன சின்ன செலவுகள் இதில் அடங்கும்.

எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு ஒரு தொகையை சேமித்து வைப்பதும் நல்லது. சிலர் கார் வாங்கும் உற்சாகத்தில் அதோடு வரும் பிற செலவுகளை கவனிப்பதே இல்லை. ஈஎம்ஐ தொகையை மட்டும் பார்க்காமல் மொத்தமாக அதற்கான செலவு என்ன என்பதையும் கணக்கிட வேண்டும். வசதியாக பராமரிக்கக் கூடிய கார் தான் உங்களுடைய சரியான தேர்வாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பை கரைக்காமல் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் லோனை திருப்பி செலுத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+