மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் பல அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பால் நடுத்தரப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் மக்கள் பெரும் தொகையை வரிக்கும் விலைவாசி உயர்வுக்குமே இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருமான வரி செலுத்துவோருக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதிலும் முக்கியமாக அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த பல தரப்பினரும், பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளதால் அதற்கான அறிவிப்புக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி
தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய மற்றும் புதிய வருமான வரி விதி கணக்கீட்டு முறையின் கீழ் வருமான வரி செலுத்தும் தனிநபருக்கு அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது.
5 லட்சம் ரூபாய் ரிபேட்
மேலும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 87A இன் கீழ், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் கொண்ட தனிநபர், 12,500 ரூபாய் வருமான வரிச் சலுகை பெறத் தகுதியுடையவராக உள்ளனர். இந்த விதிமுறை கீழ் இரண்டு வருமான வரி முறைகளின் கீழும் கிடைக்கும்.
முற்றிலும் விலக்கு
இந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்குத் தனிநபர்கள் பிரிவில், பழைய மற்றும் புதிய வருமான வரி விதிகளின் கீழ் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்படுகிறது.
cost of living பிரச்சனை
இந்தியாவில் cost of living பெரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், பணவீக்கத்தைச் சமாளிக்கப் பல வருடமாக இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் வருமான வரித் தளர்வு அளவை அதிகரிக்க வேண்டும் கோரிக்கை அதிகளவில் வருகிறது.
மக்கள் கையில் பணம்
5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுவது மூலம் மக்கள் கையில் அதிகப்படியான பணம் கிடைக்கும், இதன் மூலம் மக்களின் முதலீட்டு அளவு அதிகரிக்கும். அதேபோல் செலவு செய்ய அதிகப்படியான பணம் கிடைக்கும் காரணத்தால் இந்தியாவில் சரிந்துள்ள டிமாண்ட் அளவை எளிதாக அதிகரிக்க முடியும்.
நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2வது ஆட்சிக் காலத்தின் முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1, 2023ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2024ல் பொதுத் தேர்தல் நடக்கும் நிலையில் மத்திய அரசால் முழுப் பட்ஜெட் அறிக்கையை வெளியிட முடியாது. இதனால் இந்தப் பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
பிப்ரவரி 1
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களுக்கு நேரடியாகப் பலன் அளிக்கும் வகையில் பல திட்டம் வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், 2024 பொதுத் தேர்தலுக்காக ஜனரஞ்சகமாக இல்லாமல் சந்தைக்கு எது தேவையோ அதுதான் இருக்கும் என்ற புதிய கணிப்புகள் வெளியாகியுள்ளது.
மூலதன அதிகரிப்பு, வளர்ச்சி, உற்பத்தி
இதன் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மூலதன அதிகரிப்பு, வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையில் தான் இருக்கும். இதோடு கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பிந்தைய பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications