பெண்களுக்கு உதவும் 50:30:20 விதி பற்றி தெரியுமா? இனி சேவிங்ஸ் செம ஈசி!

சென்னை: பணத்தை எப்படி திறம்பட நிர்வகிப்பது என்பது அனைவருக்குமே சவாலான விஷயம்தான். குறிப்பாக, வேலை, குடும்பம் என பல பொறுப்புகளைச் சமாளித்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது இன்னும் சவாலாக இருக்கும். எனவே உங்கள் சம்பாத்தியத்தை எப்படி சிறப்பாக நிர்வகிப்பது, எதிர்காலத்திற்கு சேமிப்பது என பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். இதற்கு உதவும் ஒரு எளிய முறைதான் இந்த 50:30:20 விதி. இந்த விதியைப் பயன்படுத்தி உங்கள் நிதியை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பார்ப்போம்.

50:30:20 விதி என்றால் என்ன?: இந்த விதி உங்கள் சம்பாத்தியத்தை 3 முக்கியப் பிரிவுகளாகப் பிரித்து பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த விதியின் படி, உங்கள் சம்பளம் 50 சதவீதம், 30 சதவீதம், மற்றும் 20 சதவீதம் என 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

 பெண்களுக்கு உதவும் 50:30:20 விதி பற்றி தெரியுமா? இனி சேவிங்ஸ் செம ஈசி!

50 % தொகை: வாழ்க்கை நடத்துவதற்கு அவசியமான செலவுகளுக்காக இந்த 50% சம்பளத்தை ஒதுக்குங்கள். வாடகை, மளிகைச் சாமான்கள், போக்குவரத்து கட்டணங்கள், மருத்துவம் போன்ற அத்தியாவசிய செலவுகள் இதில் அடங்கும். இந்த விதியின் படி அதிக அளவிலான தொகை தினசரி தேவையை பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

30 % தொகை: உங்களுடைய விருப்பங்கள் மற்றும் ஓய்வு நேர செலவுகளுக்காக இந்த 30% சம்பளத்தை ஒதுக்குங்கள். ஷாப்பிங் செய்வது, வெளியே உணவு உண்பது, பொழுதுபோக்கு செலவுகள், பயணங்கள் போன்றவை இதில் அடங்கும்.

20 % தொகை: மீதமுள்ள 20 % சம்பளத்தை எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு பயன்படுத்துங்கள். ஓய்வுகால திட்டமிடல், அவசர நிதி தேவை, குழந்தைகளின் படிப்பு செலவுகள் போன்ற நீண்ட கால இலக்குகளுக்காக இதைப் பயன்படுத்தலாம்.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஏன் இந்த 50:30:20 விதி முக்கியம்?: உழைக்கும் பெண்கள் பொதுவாக பல பொறுப்புகளைச் சமாளிப்பதால், தங்களுடைய சம்பளத்தை எப்படி திறம்பட நிர்வகிப்பது என்பது குறித்த கவலை இருக்கலாம். இதுபோன்ற பெண்கள் 50:30:20 விதியைப் பயன்படுத்தி, எதிர்காலத்திற்கு சேமிக்கலாம். மேலும், இந்த விதி கட்டுப்பாடுடன் செலவு செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

50:30:20 விதியை எப்படி கடைப்பிடிப்பது?

பட்ஜெட்: இதற்கு உங்களுடைய மாத வருமானத்தைக் கணக்கிடுங்கள். சம்பளம், போனஸ், பிற வருமானம் என அனைத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டும். அதன் பிறகு, உங்கள் வரவு எவ்வளவு.. செலவு எவ்வளவு.. என்ற விபரங்களையும் தனித்தனியாகப் பிரித்து எழுதி வைக்க வேண்டும்.

செலவுகளைப் பட்டியலிடுங்கள்: அடுத்தபடியாக, உங்கள் மாதாந்திர செலவுகளைப் பட்டியலிடுங்கள். மாதம் மாதம் உங்கள் செலவினங்களில், ஏதேனும் தொகையை குறைக்க முடியுமா என்பதையும் பாருங்கள். இதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளை எளிதில் அடைய முடியும். உதாரணமாக, நீங்கள் வீடு வாங்க சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு உதவும் வகையில், உங்கள் செலவில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குங்கள். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா.. சிறிதாக நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு தொகையும், உங்களுக்கு பிற்காலத்தில் உதவிகரமானதாக இருக்கும்.

இது போன்ற விதியைப் பயன்படுத்துவதன் மூலம், மாதம் நீங்கள் கணிசமான வருமானத்தை சேமிப்பதற்காக ஒதுக்க முடியும். இது உங்கள் நிதி நலனைப் பாதுகாக்க உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+