நீங்கள் ஒரு பங்கு சந்தை முதலீட்டாளராகவோ அல்லது டிரேடராகவோ இருந்தால், இந்த மூன்று அம்சங்களை பற்றி தெரிந்திருக்கலாம். பங்கு சந்தையில் விலைகள் மூன்று வடிவங்களை பின்பற்றுகின்றன. அது புல்லிஷ், பியரிஷ் மற்றும் நியூட்ரல் பேட்டர்ன்கள் ஆகும்.
செய்திகளை பொருட்படுத்தாமல், ஃபண்டமென்டல் அல்லது டெக்னிக்கலை பொருட்படுத்தாமல், விலையின் போக்கில் இது புல்லிஷ் அல்லது பியரிஷ் அல்லது நியூட்ரல் என்ற போக்கினை பின்பற்றும்.
என்ன அர்த்தம்?
இதில் புல்லிஷ் டிரெண்ட் என்பதை பங்கு விலை அதிகரிக்கலாம் அல்லது அந்த பங்கு விலை அதிகரிக்கலாம் என்ற போக்கினை காட்டும். ஆக நீங்கள் பங்கினை வாங்குபவராக இருக்க வேண்டும். நீண்டகால நோக்கில் வாங்கி வைத்திருக்கலாம்.
இதே பியரிஷ் பேட்டர்னில் புல்லிஷ் டிரெண்டுக்கு தலைகீழ். இதில் நீங்கள் பங்கினை விற்பனை செய்பவராக இருப்பீர்கள். அல்லது விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கலாம். இதில் பங்கு விலை குறையலாம்.
நியூட்ரல் டிரெண்ட் என்பது ஒரு நடு நிலை போக்கு எனலாம். இதில் நீங்கள் பங்கினை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது. இது ஒரு நடு நிலையற்ற நிலையாகும். இந்த இடத்தில் பங்கு விலையோ அல்லது சந்தையோ எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
ஸ்டாக் ஆப்ஷன் என்றால் என்ன?
ஸ்டாக் ஆப்சன் என்பது ஒரு குறிப்பிட்ட பங்கினை ஒரு குறிப்பிட்ட விலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. இதில் இரண்டு ஆப்சன்கள் உண்டு.
கால் ஆப்ஷன்
ஒரு பங்கின் விலை எதிர்காலத்தில் ஏறும் என்று கணிக்கிறீர்கள் என்றால் அந்தப் பங்கின் கால் ஆப்ஷனை வாங்க வேண்டும். கால் ஆப்ஷன் என்பது வருங்காலத்தில் விலை மேலே ஏறும் என்று நம்பி வாங்குவது. நீங்கள் நினைத்தது போல் விலை மேல ஏறி விட்டால் நீங்கள் வாங்கி ஆப்ஷனில் பிரீமியம் அதிகமாகும். உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். எனினும் நீங்கள் வாங்கிய பிறகு விலை குறைந்து விட்டால், நீங்கள் ஆப்ஷனில் முதலீடு செய்துள்ள தொகை முழுவதுமாக இழப்பதற்கும் வாய்ப்பு அதிகம்
புட் ஆப்ஷன்
இதே ஒரு பங்கு எதிர்காலத்தில் விலை குறையப்போகிறது என்று கணிக்கிறீர்கள் என்றால் புட் ஆப்ஷனை வாங்க வேண்டும். புட் ஆப்ஷன் என்பது வருங்காலத்தில் விலை மேலே குறையும் என்று நம்பி வாங்குவது. நீங்கள் நினைத்தது போல் விலை குறைந்து விட்டால் நீங்கள் வாங்கி ஆப்ஷனில் பிரீமியம் அதிகமாகும். உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். எனினும் நீங்கள் வாங்கிய பிறகு விலை ஏற்றமடைந்து விட்டால், நீங்கள் ஆப்ஷனில் முதலீடு செய்துள்ள தொகை முழுவதுமாக இழப்பதற்கும் வாய்ப்பு அதிகம்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications