20% அதிகரிக்கலாம்.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்காலம் குறித்து தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 20% அதிகரிக்கலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது.

ஏன்? என்ன காரணம் எதனால் இந்த பங்கின் விலை அதிகரிக்குமென்று இந்த தரகு நிறுவனம் கணித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், அதன் கட்டண உயர்வினை செய்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் பங்கின் விலையானது 1.20% அதிகரித்து, 2,441.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஜியோவின் கட்டண உயர்வு

ஜியோவின் கட்டண உயர்வு

இதே சமீபத்தில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்களது கட்டண உயர்வினை அறிவித்துள்ளன. இதற்கிடையில் தற்போது ஜியோ நிறுவனமும் 20% கட்டண உயர்வினை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது டிசம்பர் 1ல் இருந்து அமலுக்கு வரவுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து முதலீடுகள்

தொடர்ந்து முதலீடுகள்

இதற்கிடையில் ஜியோ நிறுவனம் ஜியோபோன், ஜியோபைபர், புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமாக இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் CAGR விகிதமானது 10% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை வணிகத்தில் வளர்ச்சி

சில்லறை வணிகத்தில் வளர்ச்சி


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வணிகமும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த 4 - 5 வருடங்களில் அதன் வளர்ச்சி விகிதமானது வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதன் இ-காமர்ஸ் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு விலை

இலக்கு விலை

இதற்கிடையில் தான் ரிலையன்ஸ் ஜியோ, ஜியோமார்ட், சில்லறை வணிகத்தில் வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் பங்கு விலை இலக்காக 2900 ரூபாயினையும் நிர்ணயித்துள்ளனர். இன்று 2441.40 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ள நிலையில், வாங்க மோதிலால் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+