இந்த பங்குகள வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

பங்கு சந்தையில் முதலீடு என்றவுடன் பலருக்கும் எழும் கேள்வி எந்த பங்கினை வாங்குவது? எப்படி வாங்குவது? எவ்வளவு முதலீடு செய்யலாம்? லாபகரமானதா? அடுத்து அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என பல கேள்விகள் எழும்.

குறிப்பாக நிபுணர்கள் ஏதேனும் பங்கினை பரிந்துரை செய்தால், அதில் என்ன சாதகமான காரணிகள், பாதகமான காரணிகள் என அலசி பார்த்து வாங்கலாம்.

அந்த வகையில் ஷேர்கான் பரிந்துரைத்த சில பங்குகளை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

இன்றைய மாஸ்டெக் நிலவரம்

இன்றைய மாஸ்டெக் நிலவரம்

முதலில் நாம் பார்க்கவிருக்கும் பங்கு மாஸ்டெக் லிமிடெட் தான். இன்று அதன் விலை சந்தை முடிவில் சற்று குறைந்து, 2,958.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 3,080.10 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 2,920 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3,100 ரூபாயாகும்.

கணிப்பு என்ன?

கணிப்பு என்ன?

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3,840 ரூபாயினை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏனெனில் இந்த நிறுவனம் இங்கிலாந்துடன் ஒரு வலுவான கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இன்னும் ஆர்டர்கள் வலுவாக இருப்பதாகவும் நிறுவனம் கணித்துள்ளது. மாஸ்டெக் நிறுவனம் இங்கிலாந்து அரசிடம் 7 ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 800 மில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிரது.

 

வருமான இருமடங்காக அதிகரிக்கலாம்

வருமான இருமடங்காக அதிகரிக்கலாம்

அடுத்த மூன்று வருடங்களில் இந்த நிறுவனத்தின் வருவாயானது மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிஏஜிஆர் விகிதம் 26% அதிகரிக்கலாம் என மதிப்பிடப்படுள்ளது. தற்போது இதன் வருமானம் 281 மில்லியன் டாலராகும்.

மொத்தத்தில் இங்கிலாந்து அரசுடனான இதன் உறவு மிகவும் மேம்பட்டு வரும் நிலையில், அதன் ஒப்பந்த அளவுகள், அதன் காலம், அமெரிக்காவில் விரிவுபடுத்தி வருந்தல் என பலவும் இதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

 

பங்கு விலை அதிகரிக்கலாம்

பங்கு விலை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் எபிடா விகிதம் மேல் நோக்கி அதிகரித்து காணப்படுகிறது. இதன் வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் பங்கு விலையானது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது பங்கு என்ன?

இரண்டாவது பங்கு என்ன?

ஷேர்கானின் இரண்டாவது பரிந்துரை: நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட் லிமிடெட்.
இதன் இன்றைய பங்கு விலையானது 1.18% குறைந்து, 434.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 439.50 ரூபாயாகவும், குறைந்த விலை 430 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 450.60 ரூபாயாகும்.

நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட்

நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட்

நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளன. சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு நிலையானதாக 7% ஆக கடந்த நான்கு காலாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது. இது இன்னும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சில்லறை முதலீடுகள் இந்த பங்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் அடுத்த டார்கெட் 502 ரூபாய் எனவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

மேற்கண்ட இந்த பங்குகள் தரகு நிறுவனங்களின் அறிக்கையின் படி எழுதப்பட்டது. ஆக இதில் முதலீடு செய்யும் முன்னர், நீங்கள் முழுக்க தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+