பயன்படுத்திய கார்களை விற்பனை செய்வது தற்போது ஒரு லாபகரமான வணிகமாக வளர்ந்துள்ளது. கொஞ்சம் பொறுமையாக கவனித்துப் பார்த்தால் நல்ல தரமான பயன்படுத்திய காரையே நாம் வாங்க முடியும். பெரும்பாலானோருக்கு கார் வாங்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அனைவராலும் அதற்கு செலவு செய்ய முடியாது. இப்படி இருப்பவர்கள் நாடுவது செகண்ட் ஹேண்ட் கார்களைத் தான்.
உங்களிடம் ரூ. 6 முதல் ரூ. 7 லட்சம் வரை பட்ஜெட் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த விலையில் ஒரு புதிய காரை வாங்கலாம். ஆனால் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் கார்களை வாங்க நினைத்தால் அவற்றை செகண்ட் செகண்ட் கார்களாக வாங்கிக் கொள்ள முடியும். இதை விட குறைவான பட்ஜெட் இருந்தாலும் எத்தனை முறை அவை மறு விற்பனை செய்யப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப விலை மாறுபாட்டுடன் கார் வாங்கலாம்.

பயன்படுத்திய காரை எங்கே வாங்குவது?: சிலருக்கு பயன்படுத்திய கார்களை எங்கே தேடுவது என்பதில் தான் குழப்பம் இருக்கும். இதற்காகவே வெவ்வேறு ஊர்களிலும் பிரத்தியேகமாக சில தளங்கள் இயங்கி வருகின்றன. அதோடு சில நிறுவனங்கள் நீங்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கும் போது அவற்றுக்கு உத்தரவாதம் வழங்குகிறது.
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
ஆன்லைனில் தேடுங்கள்: ஆன்லைன் தளங்களில் உரிமையாளர்கள் மற்றும் கார்களை கூர்ந்து கவனியுங்கள். முதலில் உரிமையாளர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் வாகனம் விற்பனை செய்ய விளம்பரம் செய்த நபரின் பெயரில் தான் கார் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதுதான். இரண்டாம் கேள்வி காருக்கு ஏதேனும் கடன் நிலுவையில் உள்ளதா என்பதையும் கேட்க வேண்டும். கார் ஆவணங்கள் அனைத்தும் உரிமையாளரிடம் இருக்கிறதா? என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
வாகனத்தை ஆய்வு செய்தல்: முதலில் வாகனத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய வேண்டும். தொழிற்சாலையில் இருந்து கார் தயாரித்து வரும்போது அடிக்கப்பட்ட ஒரிஜினல் பெயிண்ட் தான் இருக்கிறதா அல்லது அதன் மேல் வேறு ஏதேனும் பெயிண்டிங் செய்து இருக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும். மங்கிப்போன கலரையும் கூட எளிதில் பெயிண்ட் அடித்து பளபளப்பாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் மறுபடியும் பெயிண்ட் அடிக்கப்பட்ட கார்களாக இருந்தால் அவற்றின் பொலிவு விரைவில் குறையத் தொடங்கும்.
உட்புறத்தை ஆய்வு செய்தல்: ஒரு வாகனம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உட்புறத்தை ஆய்வு செய்ய வேண்டும். கார்களை மறுவிற்பனை செய்யும் போது சில உரிமையாளர்கள் அவற்றின் குறைபாடுகளை மறைக்க வேறு ஏதேனும் விஷயங்களை செய்து மறைத்து வைத்திருப்பார்கள். எனவே காரை பற்றி நான்கு தெரிந்த ஒரு மெக்கானிக்கை அழைத்துச் செல்லலாம். டேஷ் போர்டு மங்கிய நிலையில் இருந்தால் வாகனம் வெளியில் வெயிலில் அதிகம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
இது கார்களை வாங்குவதற்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. தேய்மானம் அதிகமாக இருந்தால் கார் அதிக தூரம் ஓடியுள்ளது என்று அர்த்தம். பளபளப்பான புதிய சீட் கவர் இருந்தால் உள்ளே உள்ள சீட்டுகள் சேதமடைந்து அவற்றை மறைப்பதற்காக போட்டு வைத்திருக்கலாம். எனவே அவற்றை நீக்கிவிட்டு சரிபார்க்கவும்.
மெக்கானிக் உதவியை நாடுங்கள்: ஒரு சிலருக்கு கார் நன்றாக ஓட்ட தெரிந்தாலும்.. உள்ளே உள்ள பார்ட்ஸ்களை எப்படி சரி பார்ப்பது? என்பது தெரியாமல் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்க செல்லும்போது ஒரு மெக்கானிக்கை உடன் அழைத்துச் செல்லலாம். ஆனால் அந்த மெக்கானிக் உரிமையாளருக்கு தெரியாதவராக இருப்பது முக்கியம்.
பேரம் பேசுங்கள்: நீங்கள் வாங்கும் கார்களில் இருக்கும் டேமேஜ்களை பொறுத்து உரிமையாளரிடம் பேரம் பேசலாம். உண்மையிலேயே உரிமையாளர் சொல்லும் விலைக்கு அந்த கார் மதிப்புமிக்கதா என்பதை மெக்கானிக் உதவியுடன் தெரிந்து கொள்ளுங்கள். இப்படி தக்க பரிசோதனைகளை செய்து கார் வாங்கும் பட்சத்தில் செகண்ட் ஹேண்ட் கார்களாக இருந்தாலும் நல்ல கார்களை வாங்க முடியும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications