சொந்தமாக கார் வாங்கி பயணிக்க வேண்டும் என்று பலரும் கனவு காண்கின்றனர். மொத்தமாக பணத்தை கொடுத்து தான் கார் வாங்க வேண்டும் என்றால் பலருக்கும் கார் கனவு கானல் நீராக மாறி விடும். மேலும் ஆண்டுகள் செல்ல செல்ல காரின் விலை உயர்ந்து கொண்டே செல்லும்.
இதனால் கார் கடன் வாயிலாக கார் வாங்கி கனவை நிஜமாக்குவது புத்திசாலித்தனமாக முடிவாக இருக்கும். இன்று பலரும் கார்களை கடன் வாயிலாகத் தான் கார் வாங்குகிறார்கள். நீங்கள் கார் கடன் வாங்குவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அவை இதோ:

கார் கடன்கள் விவரம்: உங்களுக்கு தகுந்த கார் கடனை பெறுவதற்கு, சந்தையில் கிடைக்கும் அனைத்து கார் கடன்கள் குறித்த விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
கிரெடிட் ஸ்கோர்: கார் கடனுக்கான சாதகமான வட்டி விகிதத்தை பெற, நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது முதன்மையானது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியின் கிரெடிட் ரிப்போர்ட் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம்.
இ.எம்.ஐ.க்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவையில் உள்ள பில்களை சரியான நேரத்தில் செலுத்தி நல்ல கடன் ரிகார்ட் வைததிருப்பது கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும்.
கார் கடனுக்கான வட்டி விகிதம்: கடனின் காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவர் கடனை திருப்பி செலுத்த அதிக காலம் கிடைக்கும். வெவ்வேறு கடன் வழங்குபவர்கள் விதிக்கும் வட்டி விகிதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வட்டி விகிதத்தில் உள்ள ஒரு சிறிய வித்தியாசம் மொத்த கடன் செலவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மாதாந்திர இ.எம்.ஐ. உங்களது பட்ஜெட் மற்றும் நிதி இலக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஒருவர் சரிபார்க்க வேண்டும்.
முன் கூட்டியே கடனை அடைத்தல்: கடனை முன்கூட்டியே செலுத்துவது, கடனை அடைப்பது தொடர்பான விதிமுறைகளை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், சில கடனளிப்பவர்கள் கடனை முன்கூட்டியே கட்டி முடிப்பதற்கு அபராதங்களை விதிக்கின்றனர். பல்வேறு கடன் வழங்குபவர்களை ஒப்பீட்டு ஆய்வு செய்வது பொருத்தமான கடனை பெற உதவுகிறது.
கார் இன்ஸ்யூரன்ஸ்: கார் கடனை பெறுவதற்கு ஒரு முழுமையான கார் காப்பீட்டுக் பாலிசியை கார் வாங்குபவர் வாங்க வேண்டும் என்று கடன் வழங்குபவர்கள் விரும்பலாம். எனவே கடன் வாங்கும் முடிவை எடுக்கும் போதுஇந்த காப்பீட்டு செலவும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications