சொந்த வீடு வாங்குவது என்பது லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்நாள் கனவு. இந்த கனவு அத்தனை சீக்கிரம் நிறைவேறுவது இல்லை. அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரியல் எஸ்டேட் விலைகள் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் உயர்ந்து வருவதால் வீடு வாங்குவதற்கான 'டவுன் பேமெண்ட்' பணத்தை சேமிப்பதே பலருக்கும் குதிரை கொம்பாக இருக்கிறது ANAROCK நிறுவனத்தின் செப்டம்பர் 2026 அறிக்கையின்படி, இந்தியாவின் டாப் 7 நகரங்களில் வீடுகளின் விலை 2021 முதல் 2025 வரை 59 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப நம் டவுன் பேமெண்ட் தொகையும் உயர்கிறது.

உதாரணமாக, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாயை டவுன் பேமெண்ட்டாக வாடிக்கையாளர் தன் சொந்த பணத்திலிருந்து ஏற்பாடு செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியின் லோன்-டூ-வேல்யூ விதிகளின்படி, வீட்டின் விலையை பொறுத்து வங்கிகள் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. மீதமுள்ள 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையிலான தொகையை நாம் தான் சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டும். எனவே 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை நீங்கள் கொடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் முத்திரை தாள் கட்டணம் , பதிவு கட்டணம் ஆகியவையும் உள்ளன. இதனையும் சொந்த சேமிப்பிலிருந்துதான் தனியாக செலுத்த வேண்டும். இந்நிலையில் FinPro Wealth நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹர்ஷ் வீரா ஃபெடரல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டவுன் பேமெண்ட் பணத்தை திரட்டும் போது சில தவறுகளை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
மருத்துவ செலவுகள் அல்லது எதிர்பாராத வேலை இழப்பு போன்ற அவசர தேவைகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட Emergency Fundஇல் இருந்து பணம் எடுத்து டவுன் பேமேண்ட் செலுத்த கூடாது என்கிறார். மேலும் டவுன் பேமெண்ட் கட்டுவதற்காக பெர்சனல் லோன் வாங்குவது மிகப்பெரிய தவறு. இது உங்களின் ஒட்டுமொத்த கடன் சுமையை அதிகரிக்கும் என கூறுகிறார்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஈக்விட்டி முதலீடுகளை விற்றுவிட்டோ அல்லது ஃபிக்சட் டெபாசிட்டுகளை முன்கூட்டியே முடித்தோ முன்பணம் கட்டுவது நீண்டகால அடிப்படையில் நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்கிரார்.
சொந்த வீடு வாங்கும் கனவில் இருப்பவர்ஜள் முன் கூட்டியே அதற்கான டவுன் பேமெண்ட் தொகையை சேமிக்க தொடங்கிவிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தாங்கள் வேலை செய்யும் துறை, தற்போதைய சம்பளம் , எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் சம்பள உயர்வு ஆகியவற்றை எல்லாம் கணக்கில் தான் டவுன் பேமெண்ட் முடிவை எடுக்க வேண்டும் என்கின்றனர். நிதி ஆலோசகர்களை தொடர்பு கொண்டு முடிவெடுக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

