வீடு வாங்குவது என்பது மிகப் பெரிய முடிவாகும். உணர்ச்சிப்பூர்வமானது. மிகப்பெரும் நிதிச்சவாலைக் கொண்டது. நகரங்களில் வீட்டுமனை தட்டுபாடு காரணமாக சொந்த வீடு என்பது மிகப் பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. வாங்குபவர்கள் பொதுவாக பெரிய சொசைட்டி அல்லது அப்பார்ட்மென்ட்களில் ஒரு ஃபிளாட் வாங்கப் பார்ப்பார்கள் அல்லது தனி வீடுகளை வாங்க நினைப்பவர்களும் உண்டு.
வீடு வாங்குவதில் முதலீடு செய்வது சென்டிமென்டலான விஷயம் மட்டுமல்லாமல் நிறைய பணம் சம்பந்தப்பட்டது. இதன்மூலம் பெரிய பாதுகாப்பைப் பெறலாம். அதேநேரத்தில் குறிப்பிடத்தக்க நிதி கமிட்மென்ட்டுக்கும் ஆளாக நேரிடும். பல பேருக்கு நிறைய வீடுகள் இருக்கலாம்.

ஆனால் ஒரேயொரு வீடு வாங்க முடிபவர்கள் அதற்கு முன்பாக நன்கு யோசித்து திட்டமிட்டுவிட வேண்டும்.
நீங்கள் எந்தப் பகுதியில் வீடு வாங்குகிறீர்கள் என்பது மிக முக்கியமான விஷயமாகும்.
தவறான முடிவு எடுத்து ஏடாகூடமான பகுதியில் வீடு வாங்கிவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். அதிகம் டெவலப் ஆகாத பகுதிகள், அடிப்படை வசதிகள் குறைவான பகுதிகள், போக்குவரத்து வசதி குறைவான பகுதி, பார்ப்பதற்கு ஓகே என்றாலும் எதிர்காலத்தில் நிறைய செலவுகளை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து தவிர்த்து விட வேண்டும்.
வளர்ச்சிக்கான வாய்ப்பு, சொத்து மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ள பகுதி, அதிக வாழ்க்கைத் தரம் இருக்கும் பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டியது புத்திசாலித்தனம்.
வீடு கட்டுவதற்கு 10-20 சதவீதம் முன்பணம் செலுத்தி பாக்கியை வங்கிக் கடனாகப் பெறலாம். ப்ரீ அப்ரூவல் உள்ள வீட்டுக் கடன் பெறுவது நல்லது. இது உங்களது திரும்பச் செலுத்தும் திறனைக் கணக்கிட்டிருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டைத் தேர்ந்தெடுங்கள்.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அல்லது நிறைய வங்கிகளின் கடன் திட்டங்களை ஆராய்ந்து முடிவு செய்யவும்.
கடன் தவிர பதிவு செலவுகள், பராமரிப்பு போன்றவையும் உள்ளன. கடன் தொகை தவிர இந்தச் செலவுகளையும் நீங்கள் சமாளிக்க வேண்டும். பர்சனல் லோன்கள் மூலம் சிலர் முன்பணத்தை செலுத்துவர். ஆனால் இது கூடுதல் நிதிச்சுமையாகும். எனவே அவசரப்பட வேண்டாம். உங்களிடம் தேவையான பணம் இருக்கும்பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பில்டர்கள், புராபர்ட்டி டெவலப்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்கவும். புக்கிங் செய்து பல ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தர தாமதம் ஆகும் பல சம்பவங்கள் நடக்கின்றன. கான்ட்ராக்டர்கள் தரும் வாக்குறுதியை நம்பாமல் நீங்களே ஆராய்ந்து முடிவெடுக்கவும். இல்லாவிட்டால் நிதிப்பிரச்னை ஏற்பட்டுவிடும்.
வீடு கட்டுவதற்கு முன்பாக நன்கு யோசித்து தயாராக வேண்டியது கட்டாயமாகும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திவிட்டு பணத்தை புத்திசாலித்தனத்தோடு முதலீடு செய்யுங்கள்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications