இந்த தீபாவளிக்கு சொந்த வீடு வாங்குற பிளான் இருக்கா? இத படிச்சிட்டு முடிவெடுங்க..!!

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் புதிய பொருட்களை வாங்குவதற்கும், முதலீடுகள் செய்வதற்கும் மிகவும் மங்களகரமான காலமாக கருதுகின்றனர். தீபாவளி அன்று புது துணி அணிவது , இனிப்புகளை சாப்பிடுவது,பட்டாசு வெடிப்படி ஆகியவை கடந்து தங்கம் வாங்குவது, வாகனம் வாங்க புக்கிங் செய்வது, புது வீடு வாங்க அட்வான்ஸ் கொடுப்பது ஆகியவையும் இப்போது டிரெண்டாகிவிட்டன.

ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் தீபாவளி சமயத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அதிரடியான சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளை வாரி வழங்குகின்றனர். கோல்டு காயின் வழங்குவது, முன்பதிவு கட்டண தள்ளுபடி, கார் பார்க்கிங் கட்டணம் ரத்து, மொபைல் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் இலவசம் போன்ற பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

இந்த தீபாவளிக்கு சொந்த வீடு வாங்குற பிளான் இருக்கா? இத படிச்சிட்டு முடிவெடுங்க..!!

சில பில்டர்கள் Buy Now, Pay Later போன்ற ஆப்ஷன்களை கூட வழங்குகின்றனர். இவை ஆசையை தூண்டுவதாக இருக்கும். ஆனால் வீடு வாங்கும் திட்டம் இருப்பவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வீடு வாங்க நிதி ரீதியாக 100% தயாரா என பார்க்க வேண்டும். அடுத்ததாக சலுகைகளை வழங்கிவிட்டு, வீட்டின் அடிப்படை விலையில் ஏதேனும் மறைமுக கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read

நீங்கள் வீடு வாங்கத் திட்டமிடும் பகுதியில் நிலம் மற்றும் வீடுகளின் விலை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பது அவசியம். சில நேரங்களில், பில்டர்கள் பண்டிகை காலத்தில் விலையை செயற்கையாக உயர்த்திவிட்டு, அதன்பின் தள்ளுபடி வழங்குவது போல் அறிவிக்கலாம். எனவே, அந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் விலையுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வது நல்லது.

Recommended For You

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டி, செயலாக்க கட்டணம் இல்லை என அறிவிக்கும். குறைந்த வட்டி விகித சலுகைகள் நீண்ட கால அடிப்படையில் உங்கள் இஎம்ஐ சுமையை குறைக்க உதவும். இருப்பினும், வட்டி விகித சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமா அல்லது ஒட்டுமொத்த கடன் காலத்திற்கும் பொருந்துமா என்பதை வங்கியிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

தீபாவளியின் போது வீடு வாங்குவது மங்களகரமான தொடக்கம், பில்டர்கள் தரும் சலுகைகள் ஆகியவை சாதகமாக இருந்தாலும் அனைத்தையும் ஆய்வு செய்து தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர சலுகை கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு இடத்தையோ வீட்டையோ புக்கிங் செய்ய கூடாது.

தீபாவளி பண்டிகை சொத்து அல்லது வீடு வாங்க நல்ல தருணம் தான், ஆனால் அது மட்டுமே வீடு வாங்குவதற்கான முழுமையான காரணமாக இருக்க கூடாது. பில்டர் நம்பகமானவரா, அந்த சொத்தின் சட்டப்பூர்வ ஆவணங்கள், அந்த இடத்தின் வளர்ச்சி, உங்களது மாதாந்திர வருமானம் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்த பிறகே இறுதி முடிவெடுக்க வேண்டும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+