சென்னை: இந்தியாவில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டும் என கருதுபவர்கள் கண்டிப்பாக தபால் நிலையங்களில் கிடைக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். அந்த வகையில் நமது தபால் நிலையங்களில் PPF எனப்படும் பொது வருங்கால நிதி என்ற ஒரு முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு நீங்கள் செய்யும் முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு 7.1% தொகை வட்டியாக வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் 1500 ரூபாய் முதலீடு செய்து PPF பொது வைப்பு நிதி திட்டம் மூலம் எப்படி 5 லட்சம் ரூபாயை சேர்க்க முடியும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் பிரதான தேர்வாக PPF திட்டம் இருக்கிறது. வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7 .1 % வட்டி கிடைக்கிறது. PPF திட்டத்தினை பொருத்தவரை 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டது.

15 ஆண்டுகள் கழித்து நீங்கள் உங்களது முதலீட்டை வட்டியுடன் சேர்த்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கலாம். இந்த 15 ஆண்டு காலத்தில் நீங்கள் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று மிக எளிதாக PPF கணக்கினை தொடங்கி 500 ரூபாயிலிருந்து நீங்கள் முதலீடு செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு வரிச்சலுகைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தினை பொறுத்தவரை 15 ஆண்டுகால முதிர்வு காலம் கொண்டது. இதில் நீங்கள் மாதந்தோறும் 1500 ரூபாய் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளுக்கு நீங்கள் செய்த மொத்த முதலீட்டின் தொகை 2, 70,000 ரூபாய் தற்போது இந்த திட்டத்தில் நமக்கு 7.1 % வட்டி கிடைக்கிறது.
எனவே இந்த 15 ஆண்டு காலத்தில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி தொகை மட்டும் 2, 18, 185 ரூபாய் ஆகும். எனவே 15 ஆண்டுகால முடிவில் உங்களுக்கு 4,88,185 ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும். மேலும் ஐந்து ஆண்டு காலத்திற்கு இந்த திட்டத்தை நீட்டிக்கும் போது உங்களுக்கு கூடுதலான தொகை முதிர்வு தொகையாக கிடைத்து விடும்.
இது தபால் நிலையங்களில் கிடைக்கும் திட்டம் என்பதால் உங்களுக்கு வட்டி வருமானம் கிடைப்பது உறுதி என்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் முதலீடும் பாதுகாப்பாக இருக்கும். இதில் நீங்கள் முதலீட்டு தொகையை அதிகரிக்க அதிகரிக்க முதிர்வு தொகையும் அதிகரிக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications