மாதம் ரூ.61,000 வருமானம்! அரசு உத்தரவாதத்துடன் ரூ1.03 கோடி சேமிப்பு! ஒரு சீக்ரெட் முதலீட்டு ஐடியா!

நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை பாதுகாப்பாகவும், அதேசமயம் பல மடங்காவும் பெருக்குறதுக்கு ஒரு வழி இருந்தா எப்படி இருக்கும்? அதுவும் அரசாங்கமே அதுக்கு கேரண்டி கொடுத்தா? நல்லா இருக்கும் இல்லையா. அப்படியான அஞ்சலக திட்டம் தான் பிபிஎஃப் (PPF). உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றும் வல்லமை கொண்டது. ஏற்கனவே இது குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

ஒரு மாதம் 12,500 ரூபாய் சேமிப்பதன் மூலம் எப்படி 1.03 கோடி ரூபாயைத் தொடலாம்? அந்தப் பணத்தை வைத்து மாதம் 61,000 ரூபாய் வருமானம் ஈட்டுவது எப்படி என விரிவாகப் பார்ப்போம்.

மாதம் ரூ.61,000 வருமானம்! அரசு உத்தரவாதத்துடன் ரூ1.03 கோடி சேமிப்பு! ஒரு சீக்ரெட் முதலீட்டு ஐடியா!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று. முதலீட்டாளர்களிடம் நிதி ஒழுக்கம், பொறுமை, நிதானம் மற்றும் சரியான முதலீட்டு உத்திகள் இருந்தால், நிச்சயம் இந்த திட்டத்தின் மூலம் பெரிய இலக்கை அடைய முடியும். அதை மேற்கண்ட அம்சங்களுடன் நீண்ட கால அடிப்படையில் தொடரும்போது, கணிசமான செல்வத்தை உருவாக்கலாம்.

எப்படி ரூ.1 கோடி இலக்கை அடைவது?

· முதலீட்டாளர்கள் 1 கோடி ரூபாய் இலக்கை அடைய கூட்டு வட்டியின் பலனை பெற நீண்ட காலத்திற்கு முதலீட்டை வைத்திருக்க வேண்டும். அதோடு பிபிஎஃப் திட்டத்தின் 15 ஆண்டுகால முதிர்வை தாண்டி, மேற்கொண்டு நீடித்திருக்க வேண்டும்.

· அதற்காக இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடான 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்யலாம். அதாவது மாதம் 12,500 ரூபாய்.

· பிபிஎஃப் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் தான். இந்த 15 ஆண்டுகளில் தற்போதைய வட்டி விகிதமான 7.1%- உடன் கணக்கீடு செய்யும் போது, உங்கள் முதலீடு 40,68,209 ரூபாயாக வளரும்.

· முதிர்வு காலம் தான் முடிந்து விட்டதே பிறகு பணத்தை வெளியே எடுக்காமல் ஐந்து ஆண்டு தொகுப்புகளாக நீட்டிக்கலாம். முதல் ஐந்தாண்டு நீட்டிக்கும் போது உங்களுடைய மொத்த கார்ப்பஸ் தொகை 66,58,288 ரூபாயாகும்.

· இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை நீட்டிக்கும்போது (15+5+5), உங்கள் கைக்குக் கிடைக்கும் முதிர்வு தொகை சுமார் 1,03,08,015 ரூபாயாக இருக்கும்.

மாதம் ரூ.61,000 எப்படி?

உங்கள் பிபிஎஃப் கணக்கு 25 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் போது, உங்களிடம் 1.03 கோடி ரூபாய் கார்ப்பஸ் இருக்கும். இந்த கார்ப்பஸ் தொகையை பிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு அந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% கிடைப்பதாக கணக்கிட்டு பார்த்தால் கூட, வருடத்திற்கு சுமார் 7.31 லட்சம் வட்டி வருமானம் கிடைக்கும். இதை மாதத்திற்கு கணக்கிட்டால் கிட்டத்தட்ட 60,941 ரூபாய் கிடைக்கும். இது வெறும் வட்டி வருமானம் மட்டுமே. கார்ப்பஸ் தொகையானது அப்படியே பாதுகாப்பாக இருக்கும். ஆக ஓய்வு காலத்தை ஒருவர் நிம்மதியாக கழிக்க இதுபோன்று திட்டமிட்டால் உதவிகரமாக இருக்கும். மேலும் இந்த திட்டத்தில் சந்தை அபாயம் இல்லாததால், முதலீட்டுக்கு எந்த பங்கமும் வராது. ஆக வயதான காலத்தில் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஆக சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால் பிபிஎஃப் திட்டத்தின் மூலம் போதிய கார்ப்பஸ்-ஐ எட்ட முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+