ரூ.10,000 முதலீட்டின் மூலம் மில்லியனர் ஆக முடியுமா.. அஞ்சலக திட்டம் கைகொடுக்குமா..!

தொடர்வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். அதிலும் அஞ்சலகத்தில் இந்த திட்டம் என்பதால் பாதுகாப்பானதாகவும், கணிசமான லாபம் கொடுக்கக் கூடிய ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை குறைவாக வைத்துள்ள நிலையில், அஞ்சலத்தில் வட்டி விகிதம் சற்று அதிகமாக உள்ளது.

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி கணக்கில் யார் யார் முதலீடு செய்யலாம். நான் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்ய தயாராய் இருக்கிறேன். எனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும். இதனை எப்படி செய்வது? நான் மில்லியனர் ஆக முடியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

யார் தொடங்கலாம்

யார் தொடங்கலாம்

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அஞ்சலகத்தின் இந்த தொடர்வைப்பு நிதி கணக்கினை பெரியவர்கள் தனியாக தொடங்கிக் கொள்ளலாம். ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம்.

சலுகைகள் என்னென்ன?

சலுகைகள் என்னென்ன?

தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி சலுகையினை பெறலாம். குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
இதே 12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும்.
12 மாத டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். எனினும் இப்படி முன் கூட்டியே செலுத்தப்படும் தொகையானது குறிப்பிட்ட காலங்களில் செலுத்த முடியும்.

இடையில் பணம் எடுக்கலாமா?

இடையில் பணம் எடுக்கலாமா?

தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் தொடர விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து தொடரலாம். இவ்வாறு நீட்டிக்கப்படும் கணக்கினை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். எனினும் இதன் முதிர்வு காலம் 5 வருடங்களாகும்.

கடனும் பெறலாம்

கடனும் பெறலாம்

12 தவணை தொகை செலுத்திய பிறகு அதற்கு எதிராக, நீங்கள் இந்த தொடர் வைப்பு கணக்கின் மூலம் கடனும் பெற்றுக் கொள்ளலாம். இதுவும் நிலுவையில் 50% பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கடனை ஒரே தவணையாகவும் அல்லது மாத தவணையாகவும் கூட செலுத்திக் கொள்ளலாம்.
இதற்கு வட்டி விகிதமாக 2% + RD வட்டி விகிதமும் சேரும். ஒரு வேளை இந்த கடனை உங்களது திட்டம் முதிர்வு அடையும் வரை செலுத்தவில்லை எனில், உங்களது கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். .

எவ்வளவு கிடைக்கும்?

எவ்வளவு கிடைக்கும்?

நீங்கள் மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் 5.8% என வைத்துக் கொண்டால், உங்களது முதிர்வு தொகை 10 வருடங்களுக்கு பிறகு, 16,28,963 ரூபாயாக கிடைக்கும். உங்களின் முதலீட்டு தொகை 12,00,000 ரூபாயாக இருக்கும்.

வரி எவ்வளவு?

வரி எவ்வளவு?

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டத்தினை பொறுத்தவரையில், உங்களது டெபாசிட்டில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். உங்களது டெபாசிட் 40,000 ரூபாயினை தாண்டினால் 10% வருடாந்திர வரியாக விதிக்கப்படும். முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால் முழு முதிர்வு தொகைக்கு வரி கிடையாது. .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+