இந்தியாவில் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒரு இலக்கை நோக்கி செல்லும் முதலீடு என்பதும், குழந்தைகளின் திருமணம், ஓய்வு பெறும் வயதில் ஒரு பெரிய தொகை, வெளிநாட்டு சுற்றுலா போன்றவையை இலக்காக வைத்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இலக்கே இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது என்பதும் சிறுவயதிலிருந்தே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வந்தால் நாம் ஓய்வு பெறும் நேரத்தில் மிகப்பெரிய தொகை நம் கையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்கு
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். குழந்தைகளின் திருமணம், குழந்தைகளின் வெளிநாட்டுப் படிப்பு, வெளிநாட்டு சுற்றுலா, வீடு வாங்க வேண்டும் அல்லது தொழில் தொடங்க வேண்டும் போன்ற பல இலக்குகளை நிர்ணயம் செய்து தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
இலக்கு இல்லாதவர்கள்
அந்த வகையில் எனக்கு எந்தவிதமான இலக்கும் இல்லை, சொந்த வீடு உள்ளது, ஓரளவுக்கு சேமிப்பும் உள்ளது, ஒவ்வொரு மாதமும் எனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து செலவுகளை செய்து வருகிறேன், எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தேவையா? என்றால் கண்டிப்பாக தேவைதான் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
எதிர்கால இலக்கு
இப்போதைக்கு உங்களுக்கு எந்தவிதமான இலக்கும் இல்லை என்றாலும் பின்னாளில் உங்களுக்கு திடீரென இலக்கு ஏற்படலாம். அப்போது இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உங்களுக்கு மிகச்சிறந்த பயனுடையதாக இருக்கும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டு வீரர்
ஒரு விளையாட்டு வீரர் தேசிய அல்லது சர்வதேச போட்டியில் தற்போது விளையாடவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பயிற்சி எடுத்து கொண்டே இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றால் அவர் தனது பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மட்டுமே முடியும். அது போல் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. தற்போதைக்கு எந்த விதமான இலக்கும் இல்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் இலக்கு திடீரென ஏற்பட்டால் அந்த இலக்கை அடைய வேண்டுமென்றால் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சேமித்து வைத்த மியூச்சுவல் பண்ட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சேமிப்பு
எனவே இலக்கு இருக்கின்றதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கும் பழக்கத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications