Repo-Linked Lending Rates அடிப்படையில் கடன் வாங்கலாமா? என்ன நன்மை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான், மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, ரெப்போ ரேட்டை அடிப்படையாகக் கொண்ட கடன் திட்டங்களை, சில வங்கிகள் அறிமுகப்படுத்தின.

இதை ஆங்கிலத்தில் Repo-Linked Lending Rates (RLLR) கடன்கள் என்போம். இந்த வகையான கடன் திட்டங்கள் பெயருக்கு தகுந்தாற் போல, ரெப்போ ரேட் ஏறினால், RLRR அடிப்படையில் வாங்கிய கடன்களின் வட்டி விகிதங்களும் அதிகரிக்கும்.

ஆர்பிஐ, தன் ரெப்போ ரேட்டைக் குறைத்தால், RLLR அடிப்படையில் வாங்கிய கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தானாகவே குறையும்.

இந்தியாவுக்கான வாய்ப்புகளை தட்டி பறிக்கும் வியட்நாம்.. கோட்டை விட்டுக் கொண்டு இருக்கும் இந்தியா.. !இந்தியாவுக்கான வாய்ப்புகளை தட்டி பறிக்கும் வியட்நாம்.. கோட்டை விட்டுக் கொண்டு இருக்கும் இந்தியா.. !

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்கள்

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்கள்

பொதுவாக, வங்கிகளில் Marginal Cost-of Lending Rate (MCLR), Base Lending Rate (BLR), Repo-Linked Lending Rates (RLLR) போன்ற, அடிப்படை வட்டி விகிதங்களை வைத்து தான் கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பார்கள். இந்த அடிப்படை கடன் விகிதங்கள் + ஸ்பிரட் அல்லது மார்ஜின் போன்றவைகளை எல்லாம் வைத்து தான் கடனுக்கான வட்டியை நிர்ணயிப்பார்கள்.

எம் சி எல் ஆர் & பி எல் ஆரில் உள்ள சிக்கல்

எம் சி எல் ஆர் & பி எல் ஆரில் உள்ள சிக்கல்

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த பின்பும், மேலே சொன்ன எம் சி எல் ஆர் மற்றும் பி எல் ஆர் கடன்களின் வட்டி விகிதங்களை வங்கிகள் தான் தீர்மானிக்கும். எனவே ரெப்போ ரேட் குறைப்புக்கான பலன், தாமதமாகத் தான் கடன் வாங்கியவர்களுக்கு சென்று சேரும். அதுவும், முழுமையாக போய் சேருமா என்பதும் இங்கு கேள்விக் குறி தான்.

RLLR கடன்களில் என்ன பயன்

RLLR கடன்களில் என்ன பயன்

ஆனால் Repo-Linked Lending Rates - RLLR வட்டி விகிதங்களின் அடிப்படையில் கடன் வாங்கியவர்களுக்கான வட்டி விகிதங்கள், ஆர்பிஐ ரெப்போ வட்டியைக் குறைத்த உடனேயே, முழுமையாக வாடிக்கையாளர்களின் வட்டியும் குறையும். இதில் வங்கிகளில் தலையீடு பெரிதாக இருக்காது. தற்போது ஆர்பிஐயின் ரெப்போ வட்டி விகிதம் வரலாறு காணாத அளவுக்கு 4 சதவிகிதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணம்

உதாரணம்

ரவி, 8.25 % வட்டிக்கு 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 20 ஆண்டு காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என வைத்துக் கொள்வோம். ஆக, மாத இ எம் ஐ 42,603 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். மொத்த வட்டி மட்டும் 52.24 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.

ரெப்போ ரேட் வட்டி மாற்றம்

ரெப்போ ரேட் வட்டி மாற்றம்

மேலே சொன்ன கடனை RLLR அடிப்படையில், ரவி வாங்கி இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது ஆர்பிஐ 0.75 % ரெப்போ ரேட்டைக் குறைக்கிறார்கள் என்றால், ரவி வாங்கி இருக்கும் கடனுக்கான வட்டியும் அடுத்த ரீசெட் தேதியில் 0.75 % குறையும். அதாவது 8.25-ல் இருந்து 7.50 சதவிகிதமாக சரியும்.

வட்டியில் எதிரொலி

வட்டியில் எதிரொலி

இந்த வட்டி சரிவுக்குப் பின், ரவி வாங்கிய 50 லட்சம் ரூபாய் கடனுக்கு, 7.5 % வட்டி என்கிற கணக்கில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாத இ எம் ஐ-யாக 40,280 ரூபாய் செலுத்துவார். மொத்த வட்டிச் செலவுகள் 46.67 லட்சம் ரூபாயாக குறையும். ஆக இந்த 0.75 % வட்டி குறைவினால் 5.57 லட்சம் ரூபாய் வட்டி செலுத்த வேண்டியது தற்காலிகமாக குறையும். மீண்டும் ரெப்போ வட்டி ஏறினால், ரவியின் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும்.

மற்ற வட்டி விகிதங்கள் வாய்ப்பு குறைவு

மற்ற வட்டி விகிதங்கள் வாய்ப்பு குறைவு

இதுவே எம் சி எல் ஆர் அல்லது பி எல் ஆர் அடிப்படையில், ரவி இதே கடன்களை வாங்கி இருந்தால், ஆர்பிஐ குறைத்த ரெப்போ வட்டி விகித பலன்கள் உடனடியாகவும், முழுமையாகவும், கிடைக்காது. எனவே RLLR அடிப்படையிலான வட்டி விகிதங்களில் கடன் வாங்கிக் கொள்வது நல்லது என்கிறார் பேங்க் பசார் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அதில் ஷெட்டி.

வட்டி விகிதம் அதிகரிக்கும்

வட்டி விகிதம் அதிகரிக்கும்

RLLR அடிப்படையில் வாங்கும் கடன்களில் ஒரு பிரச்சனையும் இருக்கிறது. ஆர்பிஐ ரெப்போ வட்டியை உயர்த்தினால், RLLR வட்டி விகிதங்கள் அடிப்படையில் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரித்துவிடும். எனவே நன்கு திட்டமிட்டு, உங்கள் நிதி ஆலோசகரிடம் விசாரித்துவிட்டு எந்த அடிப்படையில் கடன்களை வாங்கலாம் என முடிவு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can we buy loan based on Repo-Linked Lending Rates?

What are the advantages of Repo-Linked Lending Rates? Can we buy loan based on Repo-Linked Lending Rates?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X