குடிப்பழக்கம், புகைப்பிடிப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் போடலாமா.. எப்படி எடுப்பது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகரெட் பிடிப்பதோ, குடிப்பதோ ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம். ஆனால் இது தெரிந்தும் அதற்கு அடிமையானவர்கள் மிக அதிகம். சிகரெட் புகைப்பது, குடிப்பழக்கம் என்பது உடல் நலத்திற்கு மட்டும் கேடு விளைப்பது அல்ல. இது உங்களின் ஆயுள் முழுக்க செலவினை ஏற்படுத்தும்.

 

உலகின் புகைப்பிடிக்கும் மக்களில் சுமார் 12% இந்தியாவில் தான் வாழ்கின்றனர். இதில் ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் எனலாம்.

தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பல நாட்களுக்கு பிறகு சரிவு.. இனியும் தொடருமா?தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பல நாட்களுக்கு பிறகு சரிவு.. இனியும் தொடருமா?

உடல் நலத்தை பாதிக்கலாம்

உடல் நலத்தை பாதிக்கலாம்

சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களை கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமிய கட்டணத்தைச் சேர்க்கின்றன. இது சிகரெட்டுகளை புகைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நுரையீரலும் பாதிக்கப்படலாம். இதனால் உடல் நலன் பெரிதும் பாதிக்கப்படலாம். இது மேற்கொண்டு நிதி ரீதியாகவும் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

ஆபத்தானவர்கள்

ஆபத்தானவர்கள்

பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் எடுப்பவர்களை இரண்டு பகுதிகளாக பிரிக்கின்றன. ஒன்று குறைந்த ஆபத்துள்ள வேலை சுயவிவரங்களைக் கொண்டவர்கள். இரண்டாவது அதிக ஆபத்துள்ளவர்கள். இதில் புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் உள்ளவர்கள் அவர்களது வேலை சுயவிவரத்தை பொருட்படுத்தாமல், ஆபத்தானவர்களாக கருதப்படுகின்றனர்.

பிரீமியம் அதிகரிக்கலாம்
 

பிரீமியம் அதிகரிக்கலாம்

ஆக சாதாரணமாக இன்சூரன்ஸ் எடுப்பவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகம். ஏனெனில் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் பாலிசிதாரர்களின் சுயவிவரங்களை (Life Style) பொறுத்து இருக்கலாம். ஆக புகைப்பிடிப்பவர்களுக்கும், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் பிரீமியம் என்பது அதிகமாகவே இருக்கும்.

பயனுள்ளதாக அமையும்

பயனுள்ளதாக அமையும்

இது பாலிசிதாரர்களின் துரதிஷ்டவசமான காலத்தில், பாலிசி தாரர்களின் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக அமையலாம். இது பாலிசிதாரர்களின் ஹெல்த் மற்றும் குடும்பத்திற்கும் பாதுகாப்பினை அளிக்கிறது.

ஒரு வேளை நீங்கள் பாலிசி வாங்கும் முன்பு புகைபிடிக்காமல் இருந்து, பாலிசி எடுத்த பிறகு குடித்து பழகினால் அதனை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இதனாலும் உங்களது பிரீமியம் என்பது கணிசமான அதிகரிக்க கூடும். ஒரு வேளை நீங்கள் தெரிவிக்காவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தான காலத்தில் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாமல் போகலாம்.

லைஃப் இன்சூரன்ஸ்

லைஃப் இன்சூரன்ஸ்

புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் கூடுதலாக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இது உங்களின் அன்பானவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற பயனுள்ளதாக இருக்கும். இது நிதி ரீதியாக உங்கள் குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு மற்றும் இறப்பு பலன் கிடைக்கும்.

ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் பாலிசிதாரர்கள் மெடிக்கல் செலவினையும் பெறலாம். இது உங்களை அவசர காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவினை சமாளிக்கும் எனலாம். இது தீவிரமான காலகட்டத்தில் உங்களுக்கு மேற்கொண்டு பிரச்சனையாக அமையும். இது மதுபழக்கம் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

பாலிசி எடுக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

பாலிசி எடுக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

ஆக புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் என்பது மேற்கொண்டு உடல் நலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது சிறு நீரகம், நுரையீரல், இதய பிரச்சனை, நுரையீரல் புற்று நோய் என பல பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனால் தான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக பிரீமியத்தை செலுத்த கூறுகின்றன. ஆக இதுபோன்ற பழக்கங்கள் உங்களை அதிக செலவினங்களை ஏற்படுத்தியுள்ளது.

சில நிறுவனங்கள் புகைபிடித்தல், குடிப்பழக்கங்களை இன்சூரன்ஸ் பாலிசிகளில் சேர்ப்பதில்லை. ஆக நீங்கள் பாலிசி எடுக்கும் முன்பு இதனை தெளிவாக தெரிந்து கொண்டு முடிவெடுங்கள்.

பாலிசி எடுக்கும் முன்பு பாலிசியினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள சிறு சிறு விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக அமையும்

பாதுகாப்பாக அமையும்

ஆக புகைப்பிடிப்பவர்களோ, மதுப்பழக்கம் உள்ளவர்கள் பாலிசி எடுக்க முடியாது என்ற காலம் போய்விட்டது. இன்று ஏராளமான ஆப்சன்கள் உள்ளன. ஆக அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து முதலீடு செய்து கொள்ளலாம். இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can we insure alcoholics and smokers? how to take?

Can we insure alcoholics and smokers? how to take?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X